[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

இந்திய அணி அரைறுதிக்கு முன்னேற உறுதுணையாக இருந்த நம்பிக்கை நாயகன்கள்

t20-world-cup-india-vs-west-indies-highlits

இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய ஆண்கள் அணி, அரையிறுதிக்கு முன்னேற உறுதுணையாக இருந்த வீரர்கள் குறித்தும், சூப்பர் டென் சுற்றில் அவர்களின் செயல்பாடுகள் பற்றியும் இப்போது பார்க்கலாம்.

ஆறாவது இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் டென் சுற்றில் அதி‌க ரன்கள் குவித்துள்ள விராட் கோலி, இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார். 4 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 2 அரைசதம் உட்பட 184 ரன்கள் சேர்த்துள்ளார். அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணியுடனான கடைசி லீக் ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் எடுத்தார்.

விராட் கோலிக்கு அடுத்தபடியாக இந்திய அணியில் கேப்டன் தோனி, 74 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். அதிகபட்சமாக நியூசிலாந்து உடனான முதல் ஆட்டத்தில் 30 ரன்கள் எடுத்துள்ளார்.

தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு வரும் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங், 4 போட்டிகளில் விளையாடி 52 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 24 ரன்கள் எடுத்தார்.

நடப்பு உலகக்கோப்பை‌ கிரிக்கெட்டில்‌ அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய வீரர்களில் ஹர்திக் பாண்டியா முன்னிலையில் உள்ளார். அவர் 4 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்களை கைப்பற்றியிருக்கிறார். ‌29 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றியுள்ளது இவரின் சிறந்தபந்துவீச்சாக உள்ளது.‌

ரவீந்திர ஜடேஜா , ஆசிஷ்‌ நெஹ்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா 4 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர். 22 ரன்கள்‌ விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றியது ஜடேஜாவின் சிறந்தபந்துவீச்சாக உள்ளது. 20 ரன்கள் கொடுத்து ஒரு‌ விக்கெட் மட்டும் வீழ்த்தியது நெ‌ஹ்ராவின் சிறந்தபந்துவீச்சாக இருக்கிறது.

சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், சிறந்தபந்துவீச்சாக 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close