[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS பி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு
  • BREAKING-NEWS சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

20 ஓவர் உலகக்கோப்பை பெண்கள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

t-20-women-s-cricket-australia-advanced-to-final

இருபது ஓவர் உலகக்கோப்பை பெண்கள் கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான‌ அரையிறுதியாட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றியை வசமாக்கியது.

டெல்லியில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் மெக் லேனிங் 55 ரன்கள் விளாசினார்.தொடக்க ஆட்டக்காரர் அலீசா ஹீலி 25 ரன்கள் எடுத்தார்.

134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீராங்கனைகளான சார்லோட் எட்வர்ட்ஸ் 31 ரன்களும், டேமி பீமவுண்ட் 32 ரன்களும் எடுத்தனர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரன்குவிக்க சிரமப்பட்ட இங்கிலாந்து அணியால், 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன்களே எடுக்க முடிந்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close