[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

ஃபார்முலா 1 - லெவிஸ் ஹாமில்டன் வெற்றி

formula-1-lewis-hamilton-wins

 சிங்கப்பூரில் நடைபெற்ற ஃபார்முலா-1 கார் பந்தயத்தில் பிரிட்டன் வீரர் ஹாமில்டன் வெற்றி பெற்றார். 

ஃபார்முலா 1 கார்பந்தயத்தின் 14-வது சுற்று சிங்கப்பூர் கிராண்ட்பிரியில் உள்ள மரினா ஓடுதளத்தில் நடைபெற்றது. 308 புள்ளி 828 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கிய இந்த போட்டியில், 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில், பிரிட்டன் வீரர் லெவிஸ் ஹாமில்டன் 2 மணி 3 நிமிடம் 23.544 வினாடிகளில் இலக்கை அடைந்து, முதலிடத்தை பிடித்தார். இதன் மூலம் இந்த சீசனில் அவர் பதிவு செய்த 7-வது வெற்றி இதுவாகும்.

ஆஸ்திரேலியாவின் டேனியல் ரிச்சார்டோ 2-வதாகவும், பின்லாந்தின் வால்டெரி போட்டாஸ், 3-வது இடத்தையும் பிடித்தனர். இந்த போட்டியின் அடுத்த சுற்று, அக்டோபர் மாதம் 1ம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close