[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் தலைமையில் வரும் 22 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்- தமிழக அரசு
  • BREAKING-NEWS தமிழக அரசின் ஸ்கூட்டர் மானியத் திட்டத்தை வரும் 24ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS தமிழக அரசின் ஸ்கூட்டர் மானியத் திட்டத்தை வரும் 24ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திரா: நெல்லூரில் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த 27 பேர் கைது
  • BREAKING-NEWS அரசியல் ஒரு சாக்கடை; யார் வேண்டுமென்றாலும் அரசியலுக்கு வரலாம்- மு.க. அழகிரி
  • BREAKING-NEWS மேல்மலையனூர் அங்காளம்மன்கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை- மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS ஆந்திரா: கடப்பாவில் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட 5 தமிழர்கள் குறித்து விவரம் அறிய 9121100565,9121100581,9121100582 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம்

பொறுப்பான ஆட்டத்தால் மீண்டும் கலக்கிய தோனி

ms-dhoni-hardik-pandya-lift-india-to-281-for-7-from-ruins

முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, பாண்ட்யாவின் பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியா 281 ரன்கள் குவித்தது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

முதலில் விளையாடிய இந்திய அணி 11 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலைக்கு சென்றது. கோலி, மணிஷ் பாண்டே டக் அவுட் ஆனார்கள். இக்கட்டான நிலையில் நிலையில் இருந்த இந்திய அணியை ரோகித் சர்மாவும், கேதர் ஜாதவும் ஜோடி சேர்ந்து சற்று மீட்டனர். இருப்பினும், 87 ரன்களை எட்டுவதற்குள் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்தது. ரோகித், கேதர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து முன்னாள் கேப்டன் தோனி, ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தனர். தோனி நிதானமாக விளையாட, பாண்ட்யா சீராக ரன்களை சேர்த்தார். ஒரு கட்டத்திற்கு மேல் பாண்ட்யா அதிரடி காட்டினார். சிக்ஸர்களாக விளாசி ஆஸ்திரேலிய வீரர்களை திணறடித்தார். பாண்ட்யாவுக்கு தோனி நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்.

அதிரடியாக விளையாடிய பாண்ட்யா 65 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பாண்ட்யா ஆட்டமிழந்த போது இந்திய அணி 40.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர், தோனி உடன் புவனேஷ்குமார் ஜோடி சேர்ந்தார். இப்போது, புவனேஷ்குமார் அடித்து விளையாட தோனி அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் ரன் சீரான வேகத்தில் உயர்ந்தது. 48-வது ஓவரில் தோனி 2 பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் அடித்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி கடைசி ஓவரின் 4-வது பந்தில் ஆட்டமிழந்தார். 88 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 79 ரன்கள் எடுத்தார் தோனி.

இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது. 11 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், 87 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறிய இந்திய அணி தோனி, பாண்ட்யாவின் பொறுப்பான ஆட்டத்தால் சிறப்பான ரன்னை எட்டியது. ஆஸ்திரேலியா அணிக்கு 282 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close