[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 3ஆம் நாளாக தடை
  • BREAKING-NEWS கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல 9ஆம் நாளாக வனத்துறை தடை விதிப்பு
  • BREAKING-NEWS திருப்பதி அருகே வனப்பகுதியில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS சுங்கச்சாவடி தாக்குதல், என்.எல்.சி முற்றுகை போராட்ட வழக்கில் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படும்- மத்திய அமைச்சர் ஜவடேகர்
  • BREAKING-NEWS ஜூலை 12 இல் எஸ்.வி.சேகர் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்- நெல்லை நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் பந்திப்போரா பகுதியில் பாதுகாப்புப் படையினரால் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

சூதாட்டப் புகாரில் சிக்கிய பாக். வீரருக்கு 10 ஆண்டுகள் தடை?

pakistan-player-khalid-latif-gambling

சூதாட்ட புகாரில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் காலித் லத்தீப்புக்கு 10 ஆண்டுகள்  தடைவிதிக்கப்படும் என தெரிகிறது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற சூதாட்டம் சர்வதேச கிரிக்கெட் வட்டாரங்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்கள் ‌ஷர்ஜில்கான், காலித் லத்தீப், முகமது இர்பான், நாசிர் ஜாம்ஷெட், ஷாசாயிப் ஹசன் ஆகிய 5 பேரை இடைநீக்கம் செய்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது. இவர்கள் மீது சர்வதேச புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ விசாரணை கொண்டது. அத்துடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சூதாட்டத்தின் பின்னணியை அறிய 3 பேர் கொண்ட நடுவர் மன்ற குழுவை அமைத்திருந்தது.

இந்நிலையில் மூன்று பேர் கொண்ட ஊழல் தடுப்புப் பிரிவு தீர்ப்பாயம் விசாரணையை முடித்துள்ளது. இதில் பாகிஸ்தான் பிரீமியர் லீக் போட்டியில் காலித் லத்தீப் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து வரும் செவ்வாய் அல்லது புதன்கிழமையில் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்றும், அதில் காலித் லத்தீப்புக்கு 10 ஆண்டுகள் விளையாட தடைவிதிக்கப்படும் என்றும் தெரிகிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close