[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வணிக ஒத்துழைப்புக்கு நம்பிக்கைக்குரிய நாடு இந்தியா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை கனடா பூர்த்தி செய்யும் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS முதல்வருடன் நட்பில் இருப்பதால் தொழில் தொடங்க விரும்புவோர் என்னை அணுகலாம் - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இரண்டு நாட்களில் முழுமையாக டவர்கள் சீர் செய்யப்பட்டு ஏர்செல் சேவை தொடங்கப்படும் - ஏர்செல் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன்
  • BREAKING-NEWS நானும் கமலும் வேறு வேறு பாதையில் சென்றாலும் இருவரின் நோக்கமும் மக்களுக்கு நல்லது செய்வதே - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நெல்லை மாவட்ட ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு
  • BREAKING-NEWS டிடிவி தினகரனுடன் கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு திடீர் சந்திப்பு

சச்சினை முந்துவார் கோலி: சேவாக் கணிப்பு

kohli-can-break-tendulkar-s-records-sehwag

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராத் கோலி முறியடிப்பார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் கூறினார்.

டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சேவாக் கூறும்போது, ‘சச்சினின் சாதனையை இன்னொரு வீரர் முறியடிப்பார் என்று நினைத்ததில்லை. ஆனால் விராத் கோலி அந்த மனநிலையை மாற்றிவிட்டார். அவர் சச்சினின் சாதனைகளை முந்துவார். விராத்துக்கு இப்போது 28 வயதுதான் ஆகிறது. இன்னும் 10 வருடம் அவர் விளையாடுவார். அப்படி விளையாடினால் சாதனைகள் படைப்பார்’ என்றார்.

’சாதனை படைக்க வேண்டும் என்று நினைத்து விளையாடுவது இல்லை. சாதனைகளை நினைத்து எனக்கு நெருக்கடி கொடுக்க விரும்பவில்லை. அணியின் வெற்றிக்கு பங்களிப்பு அளிக்க வேண்டும் என்பதே என் நோக்கமாகும்’ என்று நேற்று கூறியிருந்தார் விராத் கோலி. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close