[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வணிக ஒத்துழைப்புக்கு நம்பிக்கைக்குரிய நாடு இந்தியா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை கனடா பூர்த்தி செய்யும் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS முதல்வருடன் நட்பில் இருப்பதால் தொழில் தொடங்க விரும்புவோர் என்னை அணுகலாம் - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இரண்டு நாட்களில் முழுமையாக டவர்கள் சீர் செய்யப்பட்டு ஏர்செல் சேவை தொடங்கப்படும் - ஏர்செல் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன்
  • BREAKING-NEWS நானும் கமலும் வேறு வேறு பாதையில் சென்றாலும் இருவரின் நோக்கமும் மக்களுக்கு நல்லது செய்வதே - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நெல்லை மாவட்ட ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு
  • BREAKING-NEWS டிடிவி தினகரனுடன் கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு திடீர் சந்திப்பு

முட்டாள்தனமாக பேசுகிறார் சேவாக்: கங்குலி!

shewag-spoke-foolishly-says-ganguly

வீரேந்திர சேவாக் முட்டாள்தனமாக பேசுகிறார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறினார்.

கேப்டன் விராத் கோலியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை அனில் கும்ப்ளே ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக் உள்பட பலர் விண்ணப்பித்தனர். பின்னர் புதிய பயிற்சியாளராக ரவிசாஸ்திரி நியமிக்கப்பட்டார்.

இது தொடர்பாக கூறிய சேவாக், ’இந்திய அணியின் பயிற்சியாளராக ஆக வேண்டும் என்று நினைத்ததில்லை. பயிற்சியாளரை நியமிப்பவர்கள் அதிக அதிகாரம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் அதிகாரத்திற்கு உட்பட்டு சுதந்திரமாக செயல்பட முடியாது. எனவே மீண்டும் ஒரு முறை அந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கமாட்டேன்’ என்று கூறியிருந்தார். 
புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் இருந்த 3 உறுப்பினர்களில் ஒருவரான கங்குலியிடம் கேட்டபோது, ’இதுபற்றி சொல்வதற்கு எதுவும் இல்லை. சேவாக் முட்டாள்தனமாக பேசுகிறார்’ என்றார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close