[X] Close
JUST IN
 • BREAKING-NEWS நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது: அமைச்சர் எம்.சி.சம்பத்
 • BREAKING-NEWS தமிழ்நாடு 2ஆவது சுகாதார திட்டத்துக்கு உலக வங்கி ரூ.2600 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS வளர்ச்சித் திட்டங்களில் ஆளுநர் கவனம் செலுத்துவதை எப்படி தவறு என்று கூறமுடியும்: பொன்.ராதாகிருஷ்ணன்
 • BREAKING-NEWS சொகுசு கார் இறக்குமதி மோசடி வழக்கில் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி: உயர்நீதிமன்றம்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 30,495 போலி வாக்காளர்கள் நீக்கம்: தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS இடைக்கால தடைவிதிக்கப்பட்ட 742 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடையில்லை- உயர்நீதிமன்றம்
 • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வு ஆளும்கட்சிக்கு பக்கபலமாக இருக்கும்: தமிழிசை சவுந்தரராஜன்
 • BREAKING-NEWS உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் சந்திப்பு
 • BREAKING-NEWS தீபிகா படுகோனே நடித்துள்ள பத்மாவதி படத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு
 • BREAKING-NEWS சென்னை அரும்பாக்கத்தில் கூவம் ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 387 குடிசை வீடுகள் அகற்றம்
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,757 கன அடியில் இருந்து 1,711 கன அடியாக குறைந்தது
 • BREAKING-NEWS நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.16, சென்னையில் முட்டை விலை ரூ.5.65 ஆக நிர்ணயம்
 • BREAKING-NEWS புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விஏஓ பலி
 • BREAKING-NEWS திருவள்ளூர்: பஞ்செட்டி பகுதியில் 2 லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில் ஓட்டுநர் உயிரிழப்பு
விளையாட்டு 16 Sep, 2017 11:10 AM

தவான் இழப்பை ஈடுசெய்யும் வீரர்கள் உள்ளனர்: ரோகித் ஷர்மா நம்பிக்கை!

who-compensate-the-loss-of-dhawan-rohit-sharma-believes

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நாளைய ஆட்டத்தில் தவான் இல்லாதது இழப்பு என்றாலும், அதை ஈடுசெய்யும் வீரர்கள் இந்திய அணியில் உள்ளதாக துணைக் கேப்டன் ரோகித் ஷர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையே 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்கள் சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளதால், நாளைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை விளையாடியுள்ள 11 ஒருநாள் ‌கிரிக்கெட் போட்டிகளில் 6 வெற்றியும், 4 தோல்வியும், 1 முடிவில்லாத நிலையையும் அடைந்துள்ளது.

நாளை தொடங்கவுள்ள தொடரில் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான தவான், அவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் முதல் 3 போட்டிகளில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தவான் இல்லாதது, ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக அமையும் என அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆஸ்டன் அகர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்தியாவின் துணைக்கேப்டனும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரருமான ரோகித் ஷர்மா, இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் எந்த வரிசையிலும் களமிறங்கி பேட்டிங் செய்யத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். அத்துடன் தவான் விளையாடாதது இழப்பு என்றாலும், அந்த இடத்தை நிரப்பும் வீரர்கள் இந்திய அணியில் இடம் பெற்றிருப்பதாகவும் அவர் கூறினார்.

Advertisement:
Advertisement:
adgebra
Advertisement:
[X] Close