[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது- மு.க ஸ்டாலின்
  • BREAKING-NEWS அதிமுக ஆட்சியே சரியில்லை என்கிறேன்; இந்த ஆட்சி சரியில்லை என்பதாலேயே நான் வருகிறேன்- கமல்ஹாசன்
  • BREAKING-NEWS கேரளாவில் 5 நாட்களாக நடைபெற்று வந்த தனியார் பேருந்துகளின் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது
  • BREAKING-NEWS அரசியலில் ரஜினிகாந்த்- கமல்ஹாசன் இணைப்பை காலம் தான் தீர்மானிக்கும்- கருணாஸ் எம்.எல்.ஏ
  • BREAKING-NEWS கோச்சடையான் படத்திற்கான கடனை எப்போது திருப்பி செலுத்துவீர்கள்?- உச்சநீதிமன்றம் கேள்வி
  • BREAKING-NEWS புதுச்சேரியில் நகராட்சி வரி உயர்வுக்கு எதிரான கடையடைப்பு போராட்டத்திற்கு மீனவர்கள் ஆதரவு
  • BREAKING-NEWS இன்றைய பெட்ரோல் விலை- ரூ.74.38, டீசல் விலை- ரூ.65.67

விராத் கோலிதான் டார்க்கெட்: ஸ்மித் தகவல்

smith-not-worried-about-facing-spin-in-india

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விராத் கோலியை கட்டுப்படுத்துவதே எங்களது நோக்கமாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒரு நாள் போட்டி வரும் 17-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. 

இந்தப் போட்டி குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீபன் ஸ்மித் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் விராத் கோலியை கட்டுப்படுத்துவதுதான் எங்கள் நோக்கம். அவர் சிறந்த வீரர். ஒரு நாள் கிரிக்கெட்டில் அவர் பல சாதனைகளை படைத்திருக்கிறார்.  இந்த தொடரில் அவரை அதிகமாக ரன் குவிப்பதில் இருந்து தடுத்துவிட முடியும் என நினைக்கிறேன். இதை நாங்கள் சரியாக செய்தால் இந்த தொடரில் நாங்கள் சில வெற்றிகளை பெற வாய்ப்பிருக்கிறது.

எங்கள் வீரர்கள், சமீப காலமாக சுழற்பந்து வீச்சில் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். ஒரு நாள் போட்டியில் சுழற்பந்து வீச்சின் தாக்கம் அதிகமாக இருக்காது என்று நம்புகிறேன். எங்களது சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா, சில ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இங்கு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவமும் அவருக்கு இருக்கிறது. இந்திய அணியில் அக்‌ஷர் பட்டேல், சாஹல், குல்தீப் யாதவ் போன்ற தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். தொடர் முழுவதும் அவர்களை நாங்கள் சரியாக எதிர்கொள்வது முக்கியம். இந்தியாவுக்கு எதிராக மோதுவது எப்போதும் கடினமானதுதான்’ என்றார். 

 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close