[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

20 ஓவர் உலகக்கோப்பை பெண்கள் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தியது இலங்கை

t-20-worldcup-women-s-cricket-sri-lanka-beats-south-africa

இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பெண்கள் பிரிவில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசமாக்கியது.

பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஜெயங்கனி 52 ரன்கள் எடுத்தார்.

115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி, 20 ‌ஓவர்களின் முடிவில்‌, 7 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இலங்கை ‌அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகளும் ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இ‌ழந்து விட்‌டன.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதி‌ரான போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட இலங்கை அணிக் கேப்டன் சமரி ஜெயாங்கனி ஆட்டநாயகி விருதை வென்றார்.

தொடக்க வீராங்கனையான ஜெயாங்கனி 49 பந்துகளில் 52 ரன்கள் விளாசினார். ஒரு சிக்சர் மற்றும் 5 பவுண்டரிகள் இதில் அடக்கம். பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசிய ஜெயாங்கனி 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து விக்கெட் ஒன்றை கைப்பற்றினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close