[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தால் எவ்வித பயனும் இருக்கப்போவதில்லை: ஸ்டாலின்
 • BREAKING-NEWS ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்றதற்கு ஸ்டாலின் கண்டனம்
 • BREAKING-NEWS நாட்டில் தற்போது மின் பற்றாக்குறை என்பதே இல்லை: பிரதமர் மோடி
 • BREAKING-NEWS நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கும் சவுபாக்யா யோஜனா திட்டம் தொடக்கம்
 • BREAKING-NEWS மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 744 சிறப்பு மருத்துவர்கள் விரைவில் தேர்வு : அமைச்சர் விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன்
 • BREAKING-NEWS நடிகர் சிவாஜி கணேசன் மணி மண்டபம் அக்டோபர் 1ஆம் தேதி திறப்பு
 • BREAKING-NEWS பதவியை தக்க வைத்துக் கொள்வதிலேயே ஆட்சியாளர்கள் குறியாக இருக்கிறார்கள்: ஸ்டாலின்
 • BREAKING-NEWS அத்திப்பட்டு புதுநகர் அருகே சங்கமித்ரா விரைவு ரயில் மீது மின்கம்பி அறுத்து விழுந்தது
 • BREAKING-NEWS ஜெயலலிதா மறைந்ததும் அதிமுகவை சிறு சலசலப்பும் இல்லாமல் கட்டிக் காத்தவர் சசிகலா: டிடிவி தினகரன்
 • BREAKING-NEWS வடகொரியா உள்பட 8 நாட்டுக்கு அமெரிக்கா தடை
 • BREAKING-NEWS செந்தில் பாலாஜி எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் 11 பேருக்கு வருமான வரித்துறை சம்மன்
 • BREAKING-NEWS ரூ.50,000க்கும் மேல் பட்டாசு வாங்க ஆதார் அவசியம்
 • BREAKING-NEWS டெல்லியில் பா.ஜ.க தேசிய செயற்குழு 2வது நாளாக ஆலோசனை
விளையாட்டு 07 Sep, 2017 07:23 AM

டி20-போட்டியிலும் வெற்றி: ஆஸி.யை சமன் செய்தது இந்தியா!

kohli-pandey-lead-the-way-as-india-complete-9-0-sweep

இலங்கை அணியுடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து டி 20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம், ஒரு தொடரில் 3 வடிவிலான போட்டிகளையும் சேர்த்து தோல்வியே சந்திக்காமல் அதிக வெற்றிகளை குவித்த அணிகளின் வரிசையில் இந்தியா, ஆஸ்திரேலியாவை சமன் செய்துள்ளது. 

கொழும்புவில் நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. 26 பந்துகளில் அரைசதம் விளாசிய முனவீரா 53 ரன்கள் எடுத்தார். அவர் ஆடிய விதத்தை பார்த்தால் இலங்கை அணி, 200 ரன்களை தொடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி அசத்தினர். இலங்கையின் அஷான் பிரியன்ஜன் 41 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் சேஹல் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

171 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர்களான ரோகித் ஷர்மா 9 ரன்களிலும், லோகேஷ் ராகுல் 24 ரன்களிலும் வெளியேறினர். மணீஷ் பாண்டேவுடன் இணைந்து ரன்வேட்டை நடத்திய கேப்டன் விராத் கோலி 30 பந்துகளில் அரைசதம் அடித்தார். இது அவருக்கு 17-வது அரை சதம். அவர் 82 ரன்களில் (54 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆனார். மனிஷ் பாண்டே, வெற்றிக்குரிய ரன்னை எடுத்து தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். அவர் 36 பந்துகளில் 51 ரன் குவித்தார். அவர் 36 பந்துகளில் 51 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். 4 பந்துகள் மீதமிருந்த நிலையில் இந்தியா வெற்றி பெற்றது. 

இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்திய அணி 9 ஆட்டங்களிலும் (3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி, ஒரு டி20 போட்டி) தோல்வியை சந்திக்காமல் முழுமையாக வெற்றி பெற்றுள்ளது. ஒரு தொடரில் மூன்று வடிவிலான போட்டிகளையும் சேர்த்து தோல்வியே சந்திக்காமல் அதிக வெற்றிகளை குவித்த அணிகளின் வரிசையில் இந்தியா, ஆஸ்திரேலியாவை சமன் செய்துள்ளது. 

ஆஸ்திரேலிய அணி 2010-ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக இதே போன்று (9-0)   வெற்றி கண்டிருந்தது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close