[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்
  • BREAKING-NEWS வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
  • BREAKING-NEWS தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS பட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.

கோலியின் உத்வேகமான ஆட்டத்தால் வெற்றி : ஆஸியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி

t20-world-cup-2016-india-vs-australia-india-won-the-match

இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. விராட் கோலியின் உத்வேகமான ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசமாக்கியது.

இருபது ஓவர் உலகக்கோப்பையில் நியுசிலாந்து,வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, அணிகளை தொடர்ந்து அரையிறுதிக்கு முன்னேறும் அணி எது என்பதை தீர்மானிக்கும் ஆட்டத்தில் ‌இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் மொஹாலியில் களம் கண்டன. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு, உஸ்மான் காவ்ஜா-வும், ஆரன் பின்ச்-சும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினர்.

இந்த ஜோடி 4-வது ஓவரிலேயே ஐம்பது ரன்களை கடந்தது. காவ்ஜா 26 ரன்களில் வெளியேறினார். பின்னர் ஆஸ்தி‌ரலிய அணி வார்னர், ஸ்மித் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்ததுடன் ரன் குவிப்பில் நிதானம் காட்டியது. பின்ச், 43 ரன்களும், மேக்ஸ்வெல் 31 ரன்களும் சேர்த்தனர். 20 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது. 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ஷீகர் தவான் 12 ரன்களிலும், ரோகித் ஷர்மா 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

சுரேஷ் ரெய்னா 10 ரன்களிலும், காயத்துடன் விளையாடிய யுவராஜ் சிங் 21 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். சீரான வேகத்தில் ரன்கள் சேர்த்த விராட் கோலி அரைசதம் ‌அடித்தார். பின்னர் தோனியுடன் இணைந்த விராட் கோலி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். இதனால் இந்திய அணி 5 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. கோலி 51 பந்துகளில் 82 விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். வழக்கம் போல் வெற்றிக்கான ரன்னை பவுண்டரிக்கு விளாசிய தோனி 18 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close