[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்

அரையிறுதி வாய்ப்பை இழந்த இந்திய மகளிர் அணி: வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் போராடி தோல்வி

india-women-crash-out-of-world-t20

இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பெண்கள் பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான ஆட்டத்தில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. இதையடுத்து இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை இழக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

மொஹாலியில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்டெபானி டெய்லர் 47 ரன்களும், டாட்டின் 45 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என விளையாடிய இந்திய அணியும் சீரான வேகத்தில் ரன்கள் சேர்த்தது.5 விக்கெட்டுகள் எஞ்சியிருந்த கடைசி ஓவரில் 10 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இந்திய அணிக்கு ஏற்பட்டது. எனினும் அந்த ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்ததோடு 6 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், வெஸ்ட்இண்டீஸ் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப்போட்டியின் முடிவையடுத்து வெஸ்ட் ‌இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close