[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தால் எவ்வித பயனும் இருக்கப்போவதில்லை: ஸ்டாலின்
 • BREAKING-NEWS ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்றதற்கு ஸ்டாலின் கண்டனம்
 • BREAKING-NEWS நாட்டில் தற்போது மின் பற்றாக்குறை என்பதே இல்லை: பிரதமர் மோடி
 • BREAKING-NEWS நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கும் சவுபாக்யா யோஜனா திட்டம் தொடக்கம்
 • BREAKING-NEWS மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 744 சிறப்பு மருத்துவர்கள் விரைவில் தேர்வு : அமைச்சர் விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன்
 • BREAKING-NEWS நடிகர் சிவாஜி கணேசன் மணி மண்டபம் அக்டோபர் 1ஆம் தேதி திறப்பு
 • BREAKING-NEWS பதவியை தக்க வைத்துக் கொள்வதிலேயே ஆட்சியாளர்கள் குறியாக இருக்கிறார்கள்: ஸ்டாலின்
 • BREAKING-NEWS அத்திப்பட்டு புதுநகர் அருகே சங்கமித்ரா விரைவு ரயில் மீது மின்கம்பி அறுத்து விழுந்தது
 • BREAKING-NEWS ஜெயலலிதா மறைந்ததும் அதிமுகவை சிறு சலசலப்பும் இல்லாமல் கட்டிக் காத்தவர் சசிகலா: டிடிவி தினகரன்
 • BREAKING-NEWS வடகொரியா உள்பட 8 நாட்டுக்கு அமெரிக்கா தடை
 • BREAKING-NEWS செந்தில் பாலாஜி எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் 11 பேருக்கு வருமான வரித்துறை சம்மன்
 • BREAKING-NEWS ரூ.50,000க்கும் மேல் பட்டாசு வாங்க ஆதார் அவசியம்
 • BREAKING-NEWS டெல்லியில் பா.ஜ.க தேசிய செயற்குழு 2வது நாளாக ஆலோசனை
விளையாட்டு 05 Sep, 2017 10:21 AM

வாயை மூடிட்டு இருக்கணும்: ஸ்டோக்சை எச்சரித்த சாமுவேல்ஸ்

zip-it-or-pay-the-price-samuels-tells-stokes

’வாயை மூடிக்கிட்டு இருக்கணும், இல்லைன்னா அதுக்கான விலையை கொடுக்க வேண்டி வரும்’ என்று இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்சை எச்சரித்ததாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் சாமுவேல்ஸ் கூறியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். இவருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டர் சாமுவேல்ஸ்-க்கும் அடிக்கடி முட்டிக்கொள்ளும். மைதானத்தில் முறைப்பதும் முனங்குவதும் வாடிக்கை. அப்படியென்ன இவர்களுக்குள் வாய்க்கால்- வரப்பு பஞ்சாயத்து?
அது 2015-ல் நடந்த சம்பவம். வெஸ்ட் இண்டீஸில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டோக்ஸ் அவுட் ஆகி வெளியேறும்போது, மைதானத்தில் இருந்த சாமுவேல்ஸ் ஸ்டைலாக அவருக்கு ஒரு சல்யூட் அடித்தார். அப்போது ஆரம்பித்தது பிரச்னை. இருவரும் முறைத்துக்கொண்டார்கள். பின் திட்டிக்கொண்டார்கள். பிறகு, டி20 உலகக் கோப்பை போட்டியின் போது கொல்கத்தா மைதானத்தில் தொடர்ந்தது இவர்களின் டிஷ்யூம். இதையடுத்து, ’எப்பப்பா சண்டை போடுவீங்க?’ என்று எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டார்கள் ரசிகர்களும்.

ஏன் இப்படி? என்று சாமுவேல்ஸிடம் கேட்டால், ‘நானா எதையும் சொல்ல மாட்டேன். அவரா ஆரம்பிச்சா, நான் விடமாட்டேன். ஒருவாட்டி, வாயை மூடிக்கிட்டு இருக்கணும், இல்லைன்னா அதுக்கான விலையை கொடுக்க வேண்டி வரும்னு சொல்லிட்டேன். அதுக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள்ல ரெண்டு பேரும் சந்திச்சோம். எதுவும் சொல்லிக்கலை. இனி ஸ்டோக், அவர் பாதையில போவார்னு நம்பறேன். இல்லைன்னா, எங்கிட்டயும் இருக்கு விஷயங்கள்’ என்கிறார்.

விரைவில் இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடக்க இருக்கின்றன.

வெயிட் பண்ணுவோம்ல!

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close