[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்: அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் இந்தியா

t-20-worldcup-cricket-india-australia-contest-today

‌அரையிறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இருபது ‌ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில்,‌ ஆண்கள்‌ பிரிவில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. பி பிரிவில் இருந்து அரையிறுதிக்கு முன்னேறும் அணியை தீர்மானிக்கும் ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

மொஹாலியில் நடைபெறும் இந்‌தப் போட்டி இரவு 7.30 மணிக்குத் தொடங்கவுள்ளது. 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா‌ , ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை 12 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அதில் இந்திய அணி 8‌ போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணி 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

முன்னதாக நாக்பூரில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியுடன், ஆப்கானிஸ்தான் அணி விளையாடவுள்ளது. ஏ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை உறுதி‌செய்துள்ளது‌. ஆப்கானிஸ்தான் அணி ஆறுதல் வெற்றிக்கான முனைப்புடன் களமிறங்குகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close