[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS முன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க இருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்; தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS ரியோ பராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு

ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராகும் இந்திய அணி

yuvraj-singh-undergoes-extended-net-session-ahead-australia-world-t20-tie

உலகக்கோப்பை டி20 தொடரின் அறையிறுதி வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்ளும் முக்கிய போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள முழுவீச்சில் இந்திய அணி தயாராகி வருகிறது.

உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை தொடர்களை வென்று கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்திய அணி தொடரில் களமிறங்கியது. ஆனால், முதல் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோற்று ரசிகர்களை ஏமாற்றியது. இதையடுத்து நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வென்ற இந்திய அணி, வங்கதேசத்துடனான போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இதனால், அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைத்துக்கொள்ள பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நாளை நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்குகிறது. இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எழுச்சி பெறாதது கவலை அளிப்பதாக இருப்பதால், ரெய்னா மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரின் மீது ரசிகர்களின் பார்வை திரும்பியுள்ளது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் எண்ணத்தில் ஆஸ்திரேலிய போட்டிக்கு முன்னதாக இன்று நடைபெற்ற பயிற்சியின்போது, யுவராஜ் சிங் வழக்கத்தை விடக் கூடுதலான நேரம் வலை பயிற்சியில் ஈடுபட்டார். ஆஸ்திரேலிய அணி வேகப்பந்து வீச்சாளர்களை அதிகம் நம்பி இருக்கும் அணி என்பதால், பும்ரா, நெஹ்ரா ஆகியோரின் பந்துவீச்சுகளை அவர் அதிகம் எதிர்கொண்டு பயிற்சி மேற்கொண்டார்.

போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய துணைக் கேப்டன் விராட் கோஹ்லி, கடந்த இரு போட்டிகளும் நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுத்திருப்பதாகப் பேசினார். மேலும், ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியிருந்தாலும், அந்த அணியை குறைத்து மதிப்பிட முடியாது என்றும் கோஹ்லி கூறினார்.

நடந்துவரும் உலகக்கோப்பை டி20 தொடரை இந்திய அணி வெல்லும் பட்சத்தில், டி20 உலகக்கோப்பையை எந்த ஒரு அணியும் இரண்டு முறை வென்றதில்லை மற்றும் சொந்தமண்ணில் வென்றதில்லை என்ற சாதனைகள் முறியடிக்கப்படும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close