[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மெர்சல் என்ற பெயரில் விஜய் படத்தை விளம்பரம் செய்ய உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
  • BREAKING-NEWS கார்த்தி சிதம்பரம் மீதான லுக்அவுட் நோட்டீசை அக்டோபர் 4 வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS கர்நாடக மாநிலம் குடகில் ரிசார்ட்டில் தங்கியுள்ள தனது ஆதரவாளர்களுடன் டிடிவி தினகரன் சந்திப்பு
  • BREAKING-NEWS ஆஸ்கர் விருதுக்கு இந்தி திரைப்படமான ‘நியூட்டன்’ பரிந்துரை
  • BREAKING-NEWS குற்றங்களை மட்டும் காணும் கமல் முதல்வராக முடியாது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS தினகரன் ஆதரவு எம்.பி. வசந்தி முருகேசன், முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு
  • BREAKING-NEWS பிரதமரின் தூய்மையே சேவை திட்டத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு
  • BREAKING-NEWS அரசு சார்பில் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் தாமிரபரணி ஆற்றை தூய்மை செய்யும் பணி தொடக்கம்
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை பாக்.உணர வேண்டும்: இந்தியா
  • BREAKING-NEWS மேட்டூர் அணையின் நீர்மட்டம் - 79.33 அடி; நீர் இருப்பு - 41.29 டிஎம்சி
  • BREAKING-NEWS பாண்ட்யா அவுட்டா, அவுட் இல்லையா?
  • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.05, டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.82
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பாக அக்.5ஆம் தேதி இறுதி விசாரணை : தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கரூரில் செந்தில் பாலாஜியின் உறவினர்களுக்கு சொந்தமான 3 இடங்களில் வருமானவரி சோதனை நிறைவு
விளையாட்டு 01 Sep, 2017 07:29 AM

எப்போதும் நீங்கள்தான் எங்கள் கேப்டன்: தோனியை புகழ்ந்த கோலி!

you-will-always-remain-our-captain-kohli

எப்போதும் நீங்கள்தான் எங்கள் கேப்டன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி, தோனியை புகழ்ந்தார்.

இலங்கை அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டி மகேந்திர சிங் தோனிக்கு 300-வது போட்டி. இதையடுத்து நேற்று போட்டித் தொடங்கும் முன், அவருக்கு இந்திய அணி வீரர்கள் இணைந்து கைதட்டல்களுக்கு இடையே சில்வர் பேட் ஒன்றைப் பரிசளித்தனர்.  அப்போது கேப்டன் விராத் கோலி பேசும்போது, ‘இந்திய அணியில் இப்போது இருக்கிற 90 சதவிகிதம் பேர், உங்கள் தலைமையின் கீழ்தான் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியிருக்கிறோம். அதனால் எங்களுக்கு எப்போதும் நீங்கள்தான் கேப்டன். இந்த நினைவு பரிசை உங்களுக்கு வழங்குவதில் பெருமையடைகிறோம்’ என்றார். 

இந்தப் போட்டியில், தோனி ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 73 முறை, ஆட்டமிழக்காமல் இருந்த முதல் வீரர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார். இலங்கை அணியின் முன்னாள் வீரர் சமிந்தா வாஸ்,
தென்னாப்ரிக்க முன்னாள் வீரர் ஷான் பொல்லாக் ஆகியோர் முறையே, 72 போட்டிகளில் ஆட்டமிழக்காமல் இருந்ததே சாதனையாக இருந்தது. 


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close