[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மெக்சிகோவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூகுள் நிறுவனம் ரூ.6.43கோடி நிதியுதவி
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: பனிஹால் எஸ்.எஸ்.பி துணை ராணுவப் படை மீது பயங்கரவாதிகள் தாக்குதல்
  • BREAKING-NEWS நாமக்கல்: கிரிக்கெட் மட்டை தாக்கியதில் மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் கைதான ஆசிரியர் சஸ்பெண்ட்
  • BREAKING-NEWS சென்னையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தசரா விழாவையொட்டி சென்னையில் இருந்து மைசூருவுக்கு விமான சேவை தொடக்கம்
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீர்: பிஜிபெஹரா ரயில்நிலையத்தில் ஹிஸ்புதல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர் கைது
  • BREAKING-NEWS காவிரி வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS குண்டர் சட்ட நடவடிக்கை ரத்தானதை அடுத்து மே17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி விடுவிப்பு
  • BREAKING-NEWS எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு முடியும் வரை 18 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கக் கூடாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS இன்று மாலை நடப்பதாக அறிவிக்கப்பட்ட திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து
  • BREAKING-NEWS 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் விசாரணை தொடங்கியது
  • BREAKING-NEWS 2ஜி வழக்கில் தீர்ப்பு தேதி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு அறிவிப்பு
  • BREAKING-NEWS 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது அதிகார துஷ்பிரயோகம்: சீமான்
  • BREAKING-NEWS எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் பற்றி விமர்சிக்க திமுகவுக்கு அருகதையில்லை: அமைச்சர் ஜெயக்குமார்
விளையாட்டு 31 Aug, 2017 04:45 PM

ட்விட்டர் டிரெண்டில் தோனியின் ’300’ சாதனை

dhoni-s-300-record-in-the-tweet-trends

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி 300-வது ஒருநாள் போட்டியில் பங்கேற்றுள்ளது இந்திய அளவில் ட்விட்டர் டிரெண்டில் (Dhoni300?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags">#Dhoni300) உள்ளது. தோனிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் ட்விட்டரில் வாழ்த்து செய்திகளை குவித்து வருகின்றனர். தோனியின் சிறப்பான ஆட்டம், ஸ்டெம்பிங் வீடியோக்களை ரசிகர்கள் அதிக அளவில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ஒருநாள் போட்டிக்கான தொப்பியை 300-வது முறை போடுவது நிச்சயமாக ஒரு சிறப்பான சாதனைதான் உங்களுக்கு இன்று சிறப்பான ஆட்டமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

ரெய்னா தனது ட்விட்டரில், "ஐகானிக் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் தோனி 300-வது போட்டியில் விளையாடுகிறார். என்னை எப்பொழுதும் ஊக்குவிக்கும் அவருக்கு வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் வீரர் ஹேமங் பதானி, ”தோனியால் சாதனை செய்த பெருமையுடனும், திருப்தியுடனும் 300-வது போட்டியில் களமிறங்க முடியும். ஆனால் அவரை எனக்கு தெரியும். அவர் எப்பொழுதும் போல் அமைதியாகவும், பொறுமையாகவும்தான் இன்றும் இருப்பார். அவரிடம் எந்த வித்தியாசமும் இருக்காது” என்று சிலாகித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டின் ஜாம்பவான் 300-வது ஒருநாள் போட்டியில் அடி எடுத்து வைக்கிறார் என்று வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஐசிசி தனது டுவிட்டர் பக்கத்தில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிரான தோனியின் சிறப்பான பினிசிங் ஆட்டத்தின் வீடியோவை பதிவிட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் அறிமுகமான தோனி, சிறந்த பேட்ஸ்மேனாக இதுவரை 9,608 ரன்களை குவித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் சிறந்த விக்கெட் கீப்பராக வலம் வரும் அவர் 99 ஸ்டம்பிங்குகளை செய்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close