[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நான் உட்பட அனைத்து அமைச்சர்களும் ஜெயலலிதாவை பார்த்தோம்: அமைச்சர் செல்லூர் ராஜூ
  • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 13,281 கன அடியிலிருந்து 14,774கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: தமிழக அரசு
  • BREAKING-NEWS மும்பையின் மேற்கு பந்த்ராவில் குப்பைகளை அள்ளி தூய்மைப்பணியில் ஈடுபட்டார் சச்சின்
  • BREAKING-NEWS இன்றைய விலை: பெட்ரோல் ரூ.72.99; டீசல் ரூ.61.81
  • BREAKING-NEWS கோடியக்கரையில் தரை தட்டிய கப்பலை மீட்க 60 அடி நீள 2 விசைப்படகுகள் வர உள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS அல்லிநகரம் பகுதியில் கஞ்சா விற்ற மணி என்ற பெண் கைது- 1.25 கிலோ கஞ்சா பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை: கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக்பில்லர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் தூரல் மழை
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தால் எவ்வித பயனும் இருக்கப்போவதில்லை: ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்றதற்கு ஸ்டாலின் கண்டனம்
  • BREAKING-NEWS நாட்டில் தற்போது மின் பற்றாக்குறை என்பதே இல்லை: பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கும் சவுபாக்யா யோஜனா திட்டம் தொடக்கம்
  • BREAKING-NEWS மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 744 சிறப்பு மருத்துவர்கள் விரைவில் தேர்வு : அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன்
விளையாட்டு 30 Aug, 2017 06:03 PM

ஆஸ்திரேலியாவை வென்று சாதனை படைத்தது வங்கதேசம் 

bangladesh-has-achieved-record

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை வென்றதன் மூலம் வங்கதேச அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. 

வங்கதேச கிரிக்கெட் அணியில் நட்சத்திர ஆட்டக்காரராக திகழ்பவர் ஷாகிப் உல் ஷாசன். அதுமட்டுமின்றி ஐ.சி.சி தரவரிசைப் பட்டியலில் உள்ள ஆல்ரவுண்டர் பட்டியலில் இவர் முதலிடம் வகிக்கிறார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சுமார் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் ஷாகிப் வரலாற்று சாதனையை படைத்துள்ளார். 

முன்னதாக ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வங்கதேச தலைநகரம் டாக்காவில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய வங்கதேச அணி 260 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 217 ரன்கள் மட்டுமே எடுத்து முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது. இதனால் 43 ரன்கள் அதிகம் என்ற வித்யாசத்தில் 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணி, தொடக்கத்தில் சரிவை சந்தித்தது. பின்னர் வந்த தமிம் இக்பால் மற்றும் தைஜூல் இஸ்லாம் ஆகியோரின் சிறந்த ஆட்டத்தால் 221 ரன்களை எடுத்த நிலையில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டத்தை நிறைவு செய்தது.

இதையடுத்து 265 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஆனால் பின்னர் வந்த வார்னர் நிலைத்து விளையாடி சதம் அடித்தார். இருப்பினும் வங்கதேச அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத ஆஸ்திரேலிய அணி 20 ரன்கள் வித்யாசத்தில் தோல்வியடைந்தது. 2வது இன்னிங்ஸை பொறுத்த வரையில் வங்கதேச அணியில் கேப்டன் ஷாகிப் 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் வெற்றியை பதிவுசெய்து, ஷாகிப் உல் ஹாசன் தலைமையிலான வங்கதேச அணி சாதனை படைத்துள்ளது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close