[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

‌20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆண்கள் பிரிவில் இன்று இரண்டு போட்டிகள்..

t-20-world-cup-cricket-today-2-matches-for-men-s

இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆண்கள் பிரிவில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.

பி பிரிவில் நடைபெறும் ஆட்டத்தில் ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்ட நியூசிலாந்தும், அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்தவிட்ட பங்களாதேஷ் அணியும் விளையாடவுள்ளன.

கொல்கத்தாவில் நடைபெறும் இந்தப் போட்டி பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கவுள்ளது. 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதியுள்ள 3 போட்டிகளிலும், நியுசிலாந்து அணியே வெற்றி பெற்றுள்ளது.

ஏ பிரிவில் இன்று நடைபெறும் போட்டியில் இலங்கை அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி டெல்லியில் இரவு ஏழரை மணிக்குத் தொடங்கவுள்ளது.

20 ஓவர் கிரிக்கெட்டில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இதுவரை 6 போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடியுள்ளன. இதில் இலங்கை அணி 4 போட்டிகளிலும், இங்கிலாந்து அணி 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close