[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

புதிய வீரரை அறிமுகம் செய்த பார்சிலோனா அணி

barcelona-s-neymar-replacement-dembele

புகழ்பெற்ற பார்சிலோனா கால்பந்து அணியில் இணைந்துள்ள பிரான்ஸை சேர்ந்த நட்சத்திர வீரர் ஓஸ்மேன் டெம்பேலை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

ஸ்பெயின் நாட்டில் உள்ள 20 முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கிடையே நடைபெறும் தொடர், லா லிகா. இதில் சிறந்த அணியாக பார்சிலோனா இருக்கிறது. இந்த அணியில் மெஸ்சி, நெய்மர் மற்றும் சுவாரஸ் ஆகிய வீரர்கள் இடம்பிடித்திருந்தனர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முன்னணி கிளப்பான பாரிஸ், 200 மில்லியன் யூரோ கொடுத்து செயின்ட்-ஜெர்மைன் நெய்மரை தங்கள் அணிக்கு இழுத்தது. 

இதையடுத்து ஜெர்மனி கால்பந்து கிளப்பான பொருசியா டார்ட்மண்ட் அணியில் விளையாடும் பிரான்ஸ் வீரர் ஒஸ்மான் டெம்பெல்-ஐ, 145 மில்லியன் யூரோ கொடுத்து பார்சிலோனா வாங்கியுள்ளது. பார்சிலோனா கிளப் வரலாற்றில் முதன்முறையாக இவ்வளவு பணம் கொடுத்து ஒரு வீரரை வாங்குவது இதுதான் முதன்முறை.

பார்சிலோனா கால்பந்து அணியில் இணைந்துள்ள பிரான்ஸை சேர்ந்த நட்சத்திர வீரர் ஓஸ்மேன் டெம்பேலை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.  பார்சிலோனா மைதானத்தில் ரசிகர்கள் முன்னிலையில் தோன்றி கால்பந்து சாகசங்களை டெம்பேல் செய்து காட்டினார். 
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close