[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

குத்துச்சண்டை நாயகன் மேவெதர் உலக சாதனை: 50 போட்டிகளில் தொடர் வெற்றி

mayweather-knocks-mcgregor-win-boxing-superfight

உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டையில் அமெரிக்க வீரர் மேவெதர், அயர்லாந்தின் மெக்கிரிகோரை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில், 12 சுற்றுகள் கொண்ட உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டைப் போட்டி நடந்தது. முதல் 3 சுற்றுகளில் மெக்கிரிகோரின் கை ஓங்கியிருந்தது. அதனைத் தொடர்ந்து சரமாரியாக குத்துகள் விட்ட மேவெதர், அடுத்த 4 சுற்றிகளில் முன்னிலை பெற்றார். எட்டாவது சுற்றில் கிரிகோரும், ஒன்பதாவது சுற்றில் மேவெதரும் வெற்றி பெற்றனர். தொடர்ந்து ஆக்ரோஷமாக குத்துகள் விட்ட மேவெதர், 10-வது சுற்றில் மெக்கிரிகோரை நாக்அவுட் செய்தார்.

மேவெதர் வர்த்தக ரீதியான குத்துச்சண்டைப்‌போட்டிகளில் தொடர்ச்சியாக 50 வெற்றிகள் பெற்று, சகவீரரான ராக்கி மார்சியானோவின் சாதனையை முறியடித்தார். 40 வயதான மேவெதர், குத்துச்சண்டைக் களத்தில் ஒருமுறை கூட தோல்வியை சந்திக்கவில்லை. வெற்றி பெற்ற மேவெதருக்கு, சாம்பியன் பட்டத்துடன், சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. தோல்வியடைந்த மெக்கிரிகோருக்கு, 650 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close