[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பி.எட் 2 ஆண்டு பட்டப்படிப்புக்கு 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம்
  • BREAKING-NEWS தருமபுரி: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 30,000 கன அடியில் இருந்து 26,000 கன அடியாக குறைந்தது
  • BREAKING-NEWS வேலூர்: ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீசிய சூறைக்காற்றில் சுமார் 5,000 வாழைகள் சாய்ந்தன
  • BREAKING-NEWS இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79. 24 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.54-ஆகவும் விற்பனை
  • BREAKING-NEWS விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே பாலி பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்து 28 பேர் காயம்

ரொனால்டோவுக்கு ஐரோப்பிய கால்பந்து சம்மேளன விருது

ronaldo-won-the-european-football-federation-award

ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் சிறந்த வீரருக்கான விருதை, ரியல் மேட்ரிட் அணியைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டா மூன்றாவது முறையாக வென்றுள்ளார்.

சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கான விருது வழங்கும் விழா மொனாக்கோவில் நடைபெற்றது. சிறந்த வீரர்களுக்கான விருதுக்கு, பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்சி, ஜூவான்டஸ் அணியின் கோல் கீப்பர் கியன்லூகி பஃபன் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. 3 வீரர்களில், அதிக வாக்குகளைப் பெற்ற ரொனால்டோவுக்கு, விருது வழங்கப்பட்டது. 

போர்ச்சுகலைச் சேர்ந்த ரொனால்டோ, ஏற்கனவே 20014, 2016ஆகிய ஆண்டுகளிலும் சிறந்த வீரருக்கான யூரோ விருதை வென்றுள்ளார். 32 வயதான ரொனால்டோ, கடந்த சீசனில் 12 கோல்கள் அடித்து, ரியல் மேட்ரிட் அணி சாம்பியன்ஸ் கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தார். பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் நெதர்லாந்தைச் சேர்ந்த மார்டென்ஸ், சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close