[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் செப்டம்பர் 28 முதல் 30ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

செய்தியாளர் மீது ஆத்திரமுற்ற தோனி

angry-dhoni-blasts-reporter

பங்களாதேஷுக்கு எதிரான டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று இந்தியா 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்நிலையில், போட்டிக்குப் பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியால் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி ஆத்திரமுற்றார்.

சந்திப்பில் கலந்துகொண்ட செய்தியாளர் ஒருவர், இந்தியா-பங்களாதேஷ் டி-20 கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாக, இந்தியா அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அதன் மூலம் தான் இந்தியாவின் ரன் ரேட்டை அதிகரிக்க முடியும் என்ற பேச்சு இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் 1 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்...? எனக் கேட்டுவிட்டு தொடர்ந்து இன்னொரு கேள்வியை ஆரம்பித்தார்.

உடனே குறுக்கிட்ட தோனி, இந்தியாவின் வெற்றியால் நீங்கள் மகிழ்ச்சி அடையவில்லை என்பதையே உங்கள் கேள்வி உணர்த்துகிறது எனக் குறிப்பிட்டார்.

தோனியின் பதிலால் அதிர்ந்துபோன செய்தியாளர், இல்லை, இல்லை என ஏதோ கூற முற்பட்டார். அவரைத் தடுத்த தோனி, நான் சொல்வதைக் கேளுங்கள். உங்களது கேள்வியும் கேட்கும் தொனியும் இந்தியாவின் வெற்றியால் நீங்கள் மகிழ்ச்சி அடையவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

நாம் ஏன் அதிக ரன் சேர்க்கவில்லை என்று கேட்கும் நீங்கள், டாஸ் இழப்பு, ஆடுகளத்தின் தன்மை உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்திருக்க வேண்டும். இதைப் பற்றியெல்லாம் ஆய்வு செய்யாமல் இதுபோன்ற கேள்விகளைக் கேட்கக் கூடாது என்று கடுகடுத்தார் தோனி.

முதல் கேள்விக்கு பதில் விளாசிய தோனி, அடுத்தடுத்த கேள்விகளுக்கு கூல் கேப்டனாகவே பதிலளித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close