[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா, ஹரியானா - பாஜக தொடர்ந்து முன்னிலை
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்: அரையிறுதிக்கு முன்னேறியது நியுசிலாந்து

pakistan-lose-to-new-zealand-by-22-runs-in-mohali

இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆண்கள் பிரிவில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியுசிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து அந்த அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

மொஹாலியில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியுசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் 48 பந்துகளில் 80 ரன்கள் விளாசினார். ராஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் 36 ரன்களும், கோரி ஆண்டர்சன் 21 ரன்களும் எடுத்தனர். சமி, அப்ரிதி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு சார்ஜில் கானும், அஹமத் ஷெஷாத்தும் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.

சார்ஜில் கான் 25 பந்துகளில் 47 ரன்களும், ஷெஷாத் 30 ரன்களும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்கள் ரன்குவிக்க தவறியதால் பாகிஸ்தான் அணியால் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. நியுசிலாந்து தரப்பில் சாண்ட்னர், மில்னே தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close