[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.66 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.63 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

கிரிக்கெட் தேசத்தில் மையம் கொண்ட தடகளப் புயல்

athletic-storm-in-the-cricket-nation

சிறுத்தையின் வேகத்திற்கு நிகரா‌க களத்தில் சீறிப்பாயும் உசைன் போல்ட், விளையாட்டு உலகம் கண்ட ஆச்சர்யங்களில் ஒன்று. சர்வதேச தடகளத்தில் இருந்து ஜாம்வான் போல்ட் ஓய்வு பெற்று விட்டார்.

இலவச உணவுக்காக தொடங்கிய ஓட்டம்

குறைவான மக்கள் தொகை கொண்ட சிறிய நாடு ஜமைக்கா. இந்த கரீபியன் தீவின் ஷெர்வுட் காண்டண்ட் என்ற பகுதியை சேர்ந்தவர்தான் உசைன் போல்ட். கிரிக்கெட் விளையாட்டுக்கு பெயர் பெற்ற நாடு ஜமைக்கா. கிறிஸ் கெய்ல், மைக்கெல் ஹோல்டிங், கர்ட்டினி வால்ஷ், மார்லன் சாம்வேல்ஸ் போன்ற ஜாம்வான் வீரர்கள் ஜமைக்காவை சேர்ந்தவர்கள்தான். கிரிக்கெட்டை போல அந்நாட்டு வீரர்-வீராங்கனைகள் தடகளத்திலும் சாதித்திருக்கின்றனர். யோகன் பிளேக், அசபா பவல், ஷெரோன் சிம்ப்சன், கேம்பல் பரவுன் என பல சர்வதேச நட்சத்திரங்களை ஜமைக்கா அடையாளம் காட்டியுள்ளது. ஆனால் அனைவரிலும் முதன்மையாக வீற்றிருந்து ஆதிக்கம் செலுத்துயவர் நாயகன் போல்ட்.

30 வயதாகும் போல்ட்டிற்கு தடகள ஆர்வம் 12 வயதிலிருந்து தொடங்கியது. உள்ளூர் மதபோதகரான நியுஜெண்ட் என்பவரின் உந்துதலில் தொடங்கியது போல்ட்டின் தடகள ஆர்வம். போல்ட்டிற்கும் அவரது நண்பர் ரிக்கார்டோ-வுக்கும் இடையே ஓட்டப்பந்தயத்தை நியுஜெண்ட் நடத்துவார். வெற்றி பெறுபவர்களுக்கு அவர் இலவச உணவை வழங்குவார். இப்படி நடத்தப்பட்ட ஓட்டத்தில் மதகுரு வழங்கிய இலவச உணவு, பலமுறை உசைன் போல்டிற்கு வெற்றிப் பரிசாக அமைந்திருக்கிறது. ஓடுகளத்தில் யாரையும் உன்னால் தோற்கடிக்க முடியும் என போல்ட்டின் மனதில் நெருப்பை மூட்டியவர் மதபோதகர் நியுஜெண்ட் தான்.

சிறுத்தையை தத்தெடுத்த தடகள சிறுத்தை

பின்னாளில் உலச சாம்பியன்ஷிப் மற்றும் ஒலிம்பிக்கில் சாதித்த போல்ட்டிற்கு வனவிலங்குகளை பாதுகாப்பதிலும் அதிக ஆர்வம் உண்டு. கென்ய தலைநகர் நைரோபி வனவிலங்கு காப்பகத்தை சேர்ந்த சிறுத்தை குட்டி ஒன்றை 2009-ஆம் ஆண்டு அவர் தத்தெடுத்தார். அந்த சிறுத்தை, LIGHTNING BOLT என பெயரிடப்பட்டு வளர்க்கப்பட்டது.

கிரிக்கெட்டிலும் ஈடுபாடு கொண்டவர்

தடகளத்தில் தன்னிகரற்று திகழ்ந்த போல்ட்டுக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீதும் அதீத ஈடுபாடு உண்டு. பல காட்சிப் போட்டிகளில் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறார். கெய்ல், யுவராஜ் போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்களோடு விளையாடி மகிழ்ந்திருக்கிறார் போல்ட். பதிலுக்கு அவர்களை தம்முடன் 100 மீட்டர் ஓட்டத்தில் போட்டியிட செய்திருக்கிறார். 

ரசிகர்களின் மனம் கவர்ந்தவர்

உசேன் போல்ட்டின் தடகள சாதனை ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நீங்கா இடம் பெற்றக் கொடுத்திருக்கிறது. அதனால்தான் லண்டனில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அமெரிக்காவின் ஜஸ்டின் கேட்லின் தங்கம் வென்ற போதும், வெண்கலம் வென்ற உசைன் போல்ட்டின் பெயரை ரசிகர்கள் மீண்டும் மீண்டும் ஓங்கி ஒலித்தனர். பதக்கங்களை மட்டுமல்ல ரசிகர்கள் இதயங்களையும் வென்றிருக்கிறார் போல்ட்

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close