[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் மெர்சல் படத்தை பார்த்துவிட்டு வைகோ பாராட்டு
  • BREAKING-NEWS மெர்சலுக்கு தணிக்கை சான்றிதழ் பெறப்பட்ட நிலையில் மீண்டும் தணிக்கை செய்ய வேண்டாம்: கமல்ஹாசன்
  • BREAKING-NEWS அதிமுகவுக்கு ஆதரவாக திமுகவில் 40 ஸ்லீப்பர் செல் எம்எல்ஏக்கள் உள்ளனர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களில் தவறு எதுவுமில்லை: மண்டல தணிக்கைக்குழு அதிகாரி
  • BREAKING-NEWS சித்த மருத்துவர்களின் மேற்பார்வையில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது: சுகாதாரத்துறை செயலர்
  • BREAKING-NEWS பாஜகவில் இருந்து விஜய்க்கு முதல் ஆதரவு
  • BREAKING-NEWS டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு புழு உருவாகாமல் மக்கள் தடுக்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS மெர்சல் தயாரிப்பாளர், நடிகர்களை பாஜக மிரட்டுவதாக புகார் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூ.கண்டனம்
  • BREAKING-NEWS சாதனை படைத்த மெர்சல்: ஒரே நாளில் ரூ.33 கோடி வசூல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியால் நாட்டில் பொருளாதார புரட்சி நடந்து வருகிறது: தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS நான் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் முற்றிலும் பொய்: திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS ஜோசப் விஜயின் மோடி வெறுப்பே மெர்சல்: ஹெச். ராஜா
  • BREAKING-NEWS பொறையார் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.7.5 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர்
  • BREAKING-NEWS மெர்சலில் அரசியல் விமர்சனங்களை தொடங்கியிருப்பது சினிமாதுறைக்கும், அரசியலுக்கும் நல்லதல்ல: பொன்.ராதா
விளையாட்டு 13 Aug, 2017 02:27 PM

இலங்கை டெஸ்ட்: ஷமி, பாண்ட்யா வேகத்தில் விக்கெட்டுகள் சரிவு

shami-removes-sl-openers

இலங்கை டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 487 ரன்கள் குவித்துள்ளது.

இலங்கை அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டி கண்டியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ராகுல் மற்றும் தவான் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். ராகுல் 85 ரன்களிலும் தவான் 119 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இன்று தொடங்கிய 2-ம் நாள் ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா அதிரடி சதமடித்தார். அவர் 96 பந்துகளில் 108 ரன்கள் குவித்தார். டெஸ்ட் போட்டியில் அவருக்கு இது முதல் சதம். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 487 ரன்கள் குவித்தது.  இலங்கை தரப்பில் பெர்னாண்டோ 2, புஷ்பகுமாரா 3, சண்டகன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. முகமது ஷமியின் வேகத்தில் தொடக்க ஆட்டக்காரர்கள் கருணாரத்னேவும் (4 ரன்) தாரங்கா (5 ரன்)வும் இரையானார்கள். மெண்டிஸ் ரன் அவுட்டானார். பிறகு சண்டிமாலுடன் களமிறங்க வந்தார் மேத்யூஸ். வந்த வேகத்திலேயே அவரை எல்பிடபிள்யூ ஆக்கினார் பாண்டியா. தொடர்ந்து 4 விக்கெட்டுகள் சரிந்ததால் இலங்கை அணி திணறி வருகிறது. சண்டிமாலும் டிக்வெல்லாவும் ஆடி வருகின்றனர். அந்த அணி 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 42 ரன்கள் எடுத்துள்ளது.  

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close