[X] Close
JUST IN
  • BREAKING-NEWS முன்னாள் மத்திய அமைச்சர் இ.பொன்னுசாமி அதிமுகவிலிருந்து விலகி மீண்டும் பாஜகவில் இணைந்தார்
  • BREAKING-NEWS டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக தலைமை அலுவலகம் நாளை திறப்பு
  • BREAKING-NEWS காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் கர்நாடகா எதிர்க்கும் - கர்நாடகா முதல்வர் சித்தராமையா
  • BREAKING-NEWS பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த முறைகேடு குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS கமல் ஆலோசனை பெறவில்லை; மூத்த தலைவர் என்ற முறையில் மரியாதைக்காக சந்தித்தார் - நல்லகண்ணு
  • BREAKING-NEWS மக்களுக்காக யார் சேவை செய்தாலும் அவர்களை மதிக்க கடமைப்பட்டுள்ளேன் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு

பாண்ட்யா அதிரடி சதம்: இந்தியா ரன் குவிப்பு

hardik-pandya-gets-century

இலங்கை அணியுடனான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா அதிரடி சதமடித்தார். 

இலங்கை அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டி கண்டியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ராகுல் மற்றும் தவான் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். இவர்கள் 188 ரன்கள் சேர்த்தனர். ராகுல் 85 ரன்களிலும் தவான் 119 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பஜாரா 8 ரன்களிலும், ரஹானே 17 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். நிதானமாக விளையாடிய கேப்டன் கோலி 42 ரன்களிலும், அஷ்வின் 31 ரன்களிலும் ஆட்டமிழக்க, ஹர்திக் பாண்ட்யா 1 ரன்னுடனும், சாஹா 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
 
இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சாஹா 16 ரன்னில் ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ், முகமது ஷமி ஆகியோர் தலா 26, 8 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் கிடைத்தப் பந்துகளை நொறுக்கித் தள்ளினார் பாண்டியா. அதிரடியாக ஆடிய அவர், 86 பந்துகளில் சதமடித்தார். இதில் 7 பவுண்டரிகளும் 7 சிக்சர்களும் அடங்கும். இது டெஸ்ட் போட்டியில் அவருக்கு முதல் சதம். மறுமுனையில் உமேஷ் யாதவ் 3 ரன்களில் ஆடிக்கொண்டிருக்கிறார். உணவு இடைவேளை வரை இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 487 ரன்கள் குவித்துள்ளது. 
இலங்கை தரப்பில் புஷ்பகுமாரா 3 விக்கெட்டுகளையும், சண்டகன் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close