[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
  • BREAKING-NEWS ஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா
  • BREAKING-NEWS தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி

இந்திய கிரிக்கெட் சாதனை படைக்க இது சூப்பர் வாய்ப்பு!

india-will-look-to-complete-a-sweep

இலங்கையுடன் இன்று தொடங்கும் டெஸ்ட் போட்டியையும் வென்றால் அது இந்திய கிரிக்கெட் அணிக்கு வரலாற்று சாதனையாக அமையும்.

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கண்டி, பல்லெகலேயில் இன்று தொடங்குகிறது. ஏற்கனவே தொடரைக் கைப்பற்றி விட்ட இந்திய அணி, ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் உள்ளது. ரவீந்திர ஜடேஜாவுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால், இந்திய அணியில் அவருக்கு பதில் குல்தீப் யாதவ் களமிறங்குவார் என தெரிகிறது. இலங்கை
அணி ஆறுதல் வெற்றிக்கான நோக்கில் களமிறங்குகிறது.

இந்திய அணி 85 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் ஆடி வருகிறது. ஆனால் வெளிநாட்டில் ஒரு போதும் 3 மற்றும் அதற்கு மேல் ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர்களை முழுமையாக வென்றதில்லை. எனவே இங்கு வாகை சூடினால் அது புதிய வரலாற்று சாதனையாக அமையும். அபூர்வமாக கனிந்துள்ள இந்த பொன்னான வாய்ப்பை இந்திய வீரர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள முயற்சிப்பார்கள்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close