[X] Close
JUST IN
 • BREAKING-NEWS சித்த மருத்துவர்களின் மேற்பார்வையில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது: சுகாதாரத்துறை செயலர்
 • BREAKING-NEWS பாஜகவில் இருந்து விஜய்க்கு முதல் ஆதரவு
 • BREAKING-NEWS டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு புழு உருவாகாமல் மக்கள் தடுக்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS மெர்சல் தயாரிப்பாளர், நடிகர்களை பாஜக மிரட்டுவதாக புகார் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூ.கண்டனம்
 • BREAKING-NEWS சாதனை படைத்த மெர்சல்: ஒரே நாளில் ரூ.33 கோடி வசூல்
 • BREAKING-NEWS ஜிஎஸ்டியால் நாட்டில் பொருளாதார புரட்சி நடந்து வருகிறது: தமிழிசை சவுந்தரராஜன்
 • BREAKING-NEWS நான் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் முற்றிலும் பொய்: திருநாவுக்கரசர்
 • BREAKING-NEWS ஜோசப் விஜயின் மோடி வெறுப்பே மெர்சல்: ஹெச். ராஜா
 • BREAKING-NEWS பொறையார் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.7.5 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர்
 • BREAKING-NEWS மெர்சலில் அரசியல் விமர்சனங்களை தொடங்கியிருப்பது சினிமாதுறைக்கும், அரசியலுக்கும் நல்லதல்ல: பொன்.ராதா
 • BREAKING-NEWS டெல்லியில் பட்டாசு வெடிக்க, விற்க உச்சநீதிமன்றம் தடை விதித்ததால் காற்று மாசு குறைந்தது
 • BREAKING-NEWS டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: திருமா
 • BREAKING-NEWS பொறையார் போக்குவரத்துக் கழகம் அருகே தொழிற்சங்கத்தினர் போராட்டம்
விளையாட்டு 12 Aug, 2017 07:32 AM

விளையாட வேண்டாம்னா சொல்லுங்க: கோபமானார் கோலி!

kohli-denies-rumours

ஒரு நாள் போட்டியில் நான் விளையாட வில்லை என்று யார் சொன்னது? என்று கேள்வி எழுப்பினார் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி.

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லெகலேயில் இன்று தொடங்குகிறது. ஏற்கனவே தொடரைக் கைப்பற்றி விட்ட இந்திய அணி, ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் உள்ளது. 

இந்தப் போட்டி பற்றி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி கூறும்போது, ‘இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரை கைப்பற்றி விட்டாலும் இன்றைய போட்டியில் எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. மெத்தனம் காட்டமாட்டோம். அணியில் அதிக மாற்றங்கள் இருக்காது. தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு பவுலர் குல்தீப் யாதவ். எந்தச் சூழல் நிலையிலும் அவர் சிறப்பாக பந்துவீசுவார். சுழற் பந்துவீச்சுக்கு சாதகமில்லாத தர்மசாலா மைதானத்தில் அதை அவர் நிரூபித்து காட்டியிருக்கிறார். இந்த டெஸ்டில் அவர் களம் காண நல்ல வாய்ப்புள்ளது’ என்றார்.

அப்போது இலங்கை அணியுடனான ஒரு நாள் போட்டியில் விளையாடப் போவதில்லை என்று வந்த தகவல் பற்றி கேட்டபோது, ‘யார் இதை சொன்னது என்று தெரியவில்லை. எங்கிருந்து இப்படி வதந்தி கிளம்பி வருகிறது என்றும் தெரியவில்லை. நான் விளையாடுவது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் சொல்லிவிடுங்கள்’ என்றார் கோலி கோபமாக.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close