[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
  • BREAKING-NEWS ஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா
  • BREAKING-NEWS தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி

ஓய்வை மறுத்தார் கோலி: அஸ்வின், ஜடேஜாவுக்கு ரெஸ்ட்!

ashwin-jadeja-likely-to-be-rested

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. முதல் 2 டெஸ்டுகளில் வென்ற இந்திய அணி, நாளை தொடங்கும் அடுத்த டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறது. இதையடுத்து 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் இந்திய அணி பங்கேற்கிறது. ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி நாளை மறுதினம் அறிவிக்கப்படுகிறது. 
இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ஜடேஜாவும், அஸ்வினும் தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வருவதால் ஒரு நாள் தொடரில் அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு பதிலாக சாஹல், அக்‌ஷர் பட்டேல், ஆல்-ரவுண்டர் குணால் பாண்ட்யா ஆகியோர் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்புகிறார்.
கேப்டன் விராத் கோலி ஓய்வு தேவை இல்லை என்று கூறி விட்டதால் அவர் ஒரு நாள் தொடரிலும் ஆடுவார் என்று கூறப்படுகிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close