[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 22 ஆம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்- அமைச்சர் துரைக்கண்ணு
  • BREAKING-NEWS நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும்
  • BREAKING-NEWS புதிய தலைமுறை செய்தி எதிரொலி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை நீர்தேக்க பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மினி லாரிகள் பறிமுதல்
  • BREAKING-NEWS புதுக்கோட்டையில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது
  • BREAKING-NEWS குமரி: பெருஞ்சாணி அணையில் உபரி நீர் திறப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார்; அதற்கு நன்றி- தமிழிசை
  • BREAKING-NEWS டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வை குறைக்கக்கோரி நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம்

சென்னையில் முதல் போட்டி: ஸ்ரீசாந்த் நம்பிக்கை

if-bcce-gives-nod-sreesanth-s-first-match-will-be-in-chennai

இந்திய கிரிக்கெட் வாரியம் விளையாட அனுமதி தந்தால் சென்னையில் எனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்குவேன் என்று வேகப் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

சூதாட்ட புகாரில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் விதித்த ஆயுட்கால தடையை கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அனுமதிக்காகக் காத்திருக்கும் ஸ்ரீசாந்த் கூறும்போது, ’வாரியத்தின் அனுமதிக்காகக் காத்திருக்கிறேன். அது கிடைத்துவிட்டால் அடுத்த மாதம் சென்னையில் தொடங்கும் புச்சிபாபு கிரிக்கெட் போட்டியில் விளையாடுவேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் ஆடும் முதல் போட்டி இதுவாக இருக்கும். கடந்த நான்கரை ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடவில்லை. இது எனக்கு வருத்தமாகத்தான் இருந்தது. இந்திய அணியில் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் என்னுடன் இன்னும் தொடர்பில்தான் இருக்கிறார்கள். அவர்களின் பெயர்களை சொல்ல விரும்பவில்லை. சினிமாவில் நடிப்பது பற்றி கேட்கிறார்கள். இப்போது கன்னட படம் ஒன்றில் மட்டுமே நடிக்கிறேன். கிரிக்கெட்டுக்கு வந்துவிட்டால், ஓய்வு பெறும் வரை நடிப்பை விட்டுவிடுவேன். இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது’ என்றார். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close