[X] Close
JUST IN
 • BREAKING-NEWS நடிகர் விஜயின் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் படம்: எஸ்.ஏ.சந்திரசேகர்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்கே கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை தேவை: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் இன்று முடிவெடுக்கப்பட வாய்ப்பில்லை: டிடிவி தினகரன்
 • BREAKING-NEWS இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: விராட் கோலி தலைமையில் 16 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்க வேண்டும்: திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி
 • BREAKING-NEWS நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு; 4 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதி
 • BREAKING-NEWS முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்: கேரள முதல்வரிடம் திருமாவளவன் வலியுறுத்தல்
 • BREAKING-NEWS மெர்சல் குறித்து நான் தவறையே பதிவு செய்தேன்; தவறாக பதிவு செய்யவில்லை: தமிழிசை
 • BREAKING-NEWS ரஜினிகாந்தின் 2.O படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 27ஆம் தேதி துபாயில் நடக்கிறது; விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது: இயக்குநர் ஷங்கர்
 • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70.84, டீசல் விலை லிட்டருக்கு ரூ.59.86
 • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் முக்கிய பிரச்னைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது; படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்: ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி
 • BREAKING-NEWS கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வு பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
விளையாட்டு 08 Aug, 2017 07:32 AM

சச்சின், ஹர்பஜன் ஆடியபோது நான் கூடாதா? கேட்கிறார் ஸ்ரீசாந்த்

want-to-play-tests-again-sreesanth

சூதாட்ட புகாரில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் விதித்த ஆயுட்கால தடையை கேரள உயர்நீதிமன்றம் நேற்று ரத்து செய்து உத்தரவிட்டது. இதன் மூலம் ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியதால் நிம்மதி அடைந்துள்ளார் அவர். 

இந்த தீர்ப்பு பற்றி ஸ்ரீசாந்த் கூறும்போது, இந்த தீர்ப்பின் மூலம் எனக்கு புது வாழ்க்கை கிடைத்திருக்கிறது. ஒரு சம்பவம் உலகத்தின் முன் தவறாக அடையாளப்படுத்தப்பட்டுவிட்டது. சூதாட்டப் புகாரில் நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்கள் (பாகிஸ்தான் வீரர் முகமது ஆமிர்) கூட சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இப்போது விளையாடுகிறார்கள். அவர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் அவர்கள் நாட்டு கிரிக்கெட் வாரியமும் ஆதரவு தெரிவித்துள்ளது. என் வாழ்க்கையிலும் அப்படியொரு சம்பவம் நடைபெறும் என்று நம்புகிறேன். கடுமையாக உழைத்து இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க வேண்டும் என்பது என் நோக்கம். இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கேரள கிரிக்கெட் சங்கத்தின் ஆதரவும் முக்கியம். அவர்களிடம் இருந்து கிரீன் சிக்னல் கிடைத்ததும் பயிற்சியை தொடங்குவேன். இப்போது 34 வயது ஆகிவிட்டது. இன்னும் இந்திய அணியில் இடம் கிடைக்குமா என்று கேட்கிறார்கள். ஏன் கிடைக்காது. பாகிஸ்தானின் மிஸ்பா உல்ஹக், யூனிஸ்கான், இந்தியாவின் சச்சின், ஹர்பஜன் சிங் ஆகியோர் நாற்பதை நெருங்கியும் ஆடினார்கள். அவர்கள்தான் என்னை ஊக்கப்படுத்துபவர்கள். உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட வேண்டும் என்பதே என் லட்சியம்’ என்றார். 

கேரளாவை சேர்ந்த ஸ்ரீசாந்த் இந்திய அணிக்காக, 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் பத்து டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close