[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

20 ஓவர் உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா, பங்களாதேஷ் அணியின் பலம் மற்றும் பலவீனம்..

strength-and-weakness-of-australia-and-bangladesh-team

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆண்கள் பிரிவில் இன்று நடைபெறும் போட்டியில் விளையாடவுள்ள ஆஸ்திரேலியா, பங்களாதேஷ் அணியின் பலம், பலவீனம் மற்றும் அடுத்த சுற்றுக்கான வாய்ப்புகள்...

தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான டி-20 தொடரை வென்ற உற்சாகத்துடன் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் களமிறங்கிய ஆஸ்திரேலிய ஆண்கள் அணிக்கு முதல் போட்டியிலேயே அதிர்ச்சி கொடுத்தது நியூசிலாந்து. தர்மசாலாவில் நடந்த போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதால், எழுச்சி பெற வேண்டிய நெருக்கடி ஆஸ்திரேலிய அணிக்கு தற்போது உள்ளது.

20 ஓவர் கிரிக்கெட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியே வெற்றிவாகை சூடியிருப்பதால், இன்றைய ஆட்டத்திலும் வெற்றியை வசமாக்கி விடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளனர் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியினர்.

டேவிட் வார்னர், ஆரோன் பின்ச் , ஷேன் வாட்சன், க்ளன் மேக்ஸ்வெல், மிச்செல் மார்ஷ் ஆகிய அதிரடி பேட்ஸ்மேன்கள் இருந்தாலும், சிறந்த சுழற்பந்து வீச்சாளர் இல்லாதது ஆஸ்திரேலிய அணியின் பலவீனமாக பார்க்கப்படுகிறது.

மோர்ட்சா தலைமையிலான பங்களாதேஷ் அணியும் முதல் வெற்றிக்கான முனைப்புடன் இருக்கிறது. தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியிடம் 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டதால் புள்ளிகள் பட்டியலிலும் கடைசி இடத்தில் இருக்கிறது பங்களாதேஷ் அணி.

அரையிறுதிக்கான வாய்ப்பில் நீடிக்க வேண்டுமானால் இன்றைய போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த வேண்டிய நெருக்கடி பங்களாதேஷ் அணிக்கு இருக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close