[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

2-வது டெஸ்ட்: 500 ரன்களை கடந்தது இந்தியா

2nd-test-500-runs-to-india

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

முதலாவது டெஸ்டில் இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா -இலங்கை அணிகள் இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி கொழும்பில் நேற்று தொடங்கியது. 

முதலில் பேட் செய்த இந்திய அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் குவித்தது. புஜாரா 128 ரன்களுடனும் ரஹானே 103 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2 வது நாள் ஆட்டம் துவங்கியதும் புஜாரா 133 ரன்களிலும் ரஹானே 132 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 2-ஆம் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை 5 விக்கெட் இழப்புக்கு 442 ரன்கள் குவித்தது.

பின்னர் வந்த அஸ்வின் 54 ரன்களிலும் பாண்ட்யா 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். டிரிங்க்ஸ் இடைவேளை வரை இந்திய அணி 502 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்தது. சகா 43 ரன்களும் ஜடேஜா 2 ரன்கள் எடுத்தும் களத்தில் இருக்கின்றனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close