[X] Close
JUST IN
 • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி நாளிதழ் அலுவலகத்திற்கு வந்தார் கருணாநிதி
 • BREAKING-NEWS கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை நான் ஆதரிக்கிறேன்: ஓவியா
 • BREAKING-NEWS ஆசிய கோப்பை ஹாக்கி: மலேசிய அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி
 • BREAKING-NEWS நிலவேம்பு குடிநீர் குறித்து பேசுவதற்கு கமல் மருத்துவரோ, விஞ்ஞானியோ கிடையாது: கடம்பூர் ராஜூ
 • BREAKING-NEWS டெங்கு கொசுக்களை ஒழிப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பு தேவை: சுகாதாரத்துறை செயலர்
 • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: எல்லையில் ராணுவ உடையில் வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார் பிரதமர் மோடி
 • BREAKING-NEWS ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவு
 • BREAKING-NEWS நிலவேம்பு கசாயம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் கமலுக்கு அரசு சித்த மருத்துவர்கள் கண்டனம்
 • BREAKING-NEWS 15 நாட்களில் டெங்கு காய்ச்சல் முழுவதும் கட்டுப்படுத்தப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS தீபாவளி டாஸ்மாக் மது விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20%குறைந்தது
 • BREAKING-NEWS வித்தியாசமாக பேச வேண்டும் என்பதற்காகவே நிலவேம்பு கசாயம் குறித்து கமல்ஹாசன் கருத்து கூறியுள்ளார்: இல.கணேசன்
 • BREAKING-NEWS மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும்: தமிழிசை
 • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீரில் காலை 6.40 மணியளவில் நில அதிர்வு- ரிக்டர் அளவு கோலில் 4.7ஆக பதிவு
 • BREAKING-NEWS தஞ்சை மாவட்டத்தில் 34 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்: ஆட்சியர் அண்ணாதுரை
விளையாட்டு 31 Jul, 2017 07:18 PM

தோனிதான் ஆல்டைம் பெஸ்ட் கேப்டன்.. ஆனால் விராத் கோலியாலும் சாதிக்க முடியும்.. ரவி சாஸ்திரி

dhoni-greatest-ever-india-captain-but-kohli-may-catch-up-ravi-shastri

இந்திய அணியின் சிறந்த கேப்டன் தோனிதான், ஆனால் அவரது சாதனைகளை தற்போதைய கேப்டன் விராத் கோலியால் சமன் செய்ய முடியும் என்று தாம் நம்புவதாக தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக பெங்காலி பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், கேப்டனாக மகேந்திரசிங் தோனியுடன், விராத் கோலியை ஒப்பிடுவது தற்போதைய சூழலில் சரியாக இருக்காது. ஆனால் தோனியின் சாதனையை அவர் எட்டிப்பிடிப்பார் என்று தாம் நம்புவதாகத் தெரிவித்தார். கடந்த 35 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாட்டுடன் தொடர்ந்து பயணித்து வருவதாகக் கூறிய அவர், சச்சினைத் தவிர்த்துவிட்டு பார்த்தால் சர்வதேச கிரிக்கெட்டில் விராத் கோலியைத் தவிர மற்றெந்த வீரரும் இவ்வளவு சாதனைகளைத் தகர்ப்பதைப் பார்த்ததில்லை என்றும் ரவிசாஸ்திரி கூறியுள்ளார். 

தோனியே இந்தியாவின் ஆல்டைம் பெஸ்ட் கேப்டன் என்று கூறிய ரவிசாஸ்திரி, உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை ஆகிய தொடர்களை தோனி வென்றெடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல, மற்றொரு உலகக் கோப்பை டி20 போட்டியில் இறுதிப் போட்டிவரை அணியை கொண்டு சென்றிருக்கிறார். மேலும், இரண்டு உலகக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை டி20 அரையிறுதிப் போட்டி வரை தோனி தலைமையிலான இந்திய அணி முன்னேறியிருக்கிறது என்று தெரிவித்தார். இந்த தலைமுறையின் ஆகச் சிறந்த கேப்டனாக உருவெடுக்கும் அனைத்து திறமைகளும் விராத் கோலிக்கு இருப்பதாகவும் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் இயக்குனராக கடந்த 2014 முதல் 2016ம் ஆண்டு வரை பதவி வகித்த ரவி சாஸ்திரி தோனி மற்றும் விராத் கோலி ஆகிய இருவருடனும் பயணித்துள்ளார். ஒராண்டு இடைவெளிக்குப் பின்னர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி பொறுப்பேற்றுள்ளார். அவர் பதவியேற்ற பின்னர் இந்திய அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close