[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டதாக மேலும் 68 பேர் கைது- தூத்துக்குடி காவல்துறை
  • BREAKING-NEWS வடகொரியாவுடன் நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை ரத்து - அமெரிக்கா
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட வாய்ப்பு இல்லை; அரசின் எண்ணமும் அதுதான் - ஆட்சியர் சந்தீப் நந்தூரி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து பெங்களூருவில் உள்ள வேதாந்தா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்கள்
  • BREAKING-NEWS அரசு, நீதிமன்ற அனுமதி பெற்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவோம்- ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால்
  • BREAKING-NEWS தூத்துக்குடி அண்ணாநகரில் ஆயுதம் ஏந்திய 100க்கும் மேற்பட்ட கமாண்டோ படை வீரர்கள், 500க்கும் மேற்பட்ட போலீசார் அணிவகுப்பு
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் பிரேத பரிசோதனை அறிக்கையை மே 30ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றம்

கோலி 17-வது சதம்: இலங்கைக்கு 550 ரன் இலக்கு

kohli-17th-century

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி இன்று சதமடித்தார். இது டெஸ்ட்டில் அவருக்கு 17-வது சதமாகும்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் தொடங்கியது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி 600 ரன்களை குவித்தது.  மூன்றாம் நாளான நேற்று இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் ‌291 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இலங்கை அணிக்கு ஃபாலோ ஆன் வழங்காமல், இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது. தொடக்க வீரர் தவான் 14 ரன்களிலும், புஜாரா 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க வீரர் அபினவ் முகுந்தும், கேப்டன் விராட் கோலியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தனர். அபினவ் முகுந்த் 81 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 76 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறப்பாக விளையாடிய விராத் கோலி சதம் அடித்தார். இது டெஸ்டில் அவருக்கு 17-வது சதம் ஆகும். பின்னர் இந்திய அணி 240 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து இலங்கை அணிக்கு 550 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close