[X] Close
JUST IN
விளையாட்டு 28 Jul, 2017 02:12 PM

290 ரன்களுக்கு இலங்கை ஆல் அவுட்

srilanka-all-out-for-290

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் நேற்றுமுன் தினம் தொடங்கியது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி 600 ரன்களை குவித்தது. அடுத்து, பேட்டிங்கை துவக்கிய இலங்கை அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 44 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்திருந்தது. இன்று தொடங்கிய ஆட்டத்தில் மேத்யூஸ் 83 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இலங்கை அணியை பாலோ ஆன் ஆவதில் இருந்து காப்பாற்றுவதற்காக பெரேரா கடுமையாக போராடினார். அவர் போராடினாலும் மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தபடி இருந்தது. அந்த அணி 78 ஓவர்களில் 291 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பெரேரா 92 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் ஷமி 2 விக்கெட்டையும் கைப்பற்றினர். ஹர்திக் பாண்ட்யா டெஸ்ட் போட்டியில் தனது முதல் விக்கெட்டை எடுத்தார். அஸ்வின், உமேஷ் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இலங்கை அணி பாலோ ஆன் ஆன போதும் இலங்கையை பேட் செய்ய பணிக்காமல் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை துவங்கியது. 16 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. தவான் 14 ரன்களில் அவுட்டானார். அபினவ் முகுந்தும் புஜாராவும் ஆடிக்கொண்டிருக்கின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close