[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

20 ஓவர் உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணி அபார வெற்றி: தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 230 ரன் இலக்கை ‌எட்டிப் பிடித்து சாதனை

root-takes-england-to-record-wt20-chase

தென்னாப்ரிக்காவுக்கு எதிராக நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி சாதனை வெற்றியை பதிவு செய்தது.

மும்பையில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தென்னாப்ரிக்க அணி நிர்ணயித்த 230 ரன் என்ற இமாலய இலக்கை இங்கிலாந்து 19.4 ஓவரில் 8 வி‌க்கெட்டுகளை இழந்து எட்டியது. இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட் 44 பந்துகளில் 83 ரன்களும் , ஜேசன் ராய் 16 பந்துகளில் 43 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர். முதலில் பேட் செய்த தென்னாப்ரிக்கா 20 ஓவரில் 4 வி‌க்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது.

தொடக்க வீரர்கள் அம்லா 58, குவிண்டன் டிகாக் 52 ரன்னும் டுமினி 54ரன்னும் எடுத்தனர். 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமாக துரத்தப்பட்ட மிகப்பெரிய இலக்கு இதுவாகும். இதற்கு முன் 2007ம் ஆண்டு நடந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 205 ரன்களை தென்னாப்ரிக்கா வெற்றிகரமாக துரத்தியதே சாதனையாக இருந்தது. ஒட்டுமொத்த 20 ஓவர் சர்வதேச போட்டிகளில் 2வது பெரிய வெற்றிகரமான ரன் துரத்தலாகவும் இங்கிலாந்தின் வெற்றி அமைந்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close