[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒகி புயல் பாதிப்பு குறித்த அறிக்கையை இன்று மத்திய அரசுக்கு அனுப்புகிறது தமிழக அரசு
  • BREAKING-NEWS கொளத்தூர் செல்லப்பிள்ளை என்றாலும் ஆர்.கே. நகரை வளர்ப்புப் பிள்ளையாக கருதி வளர்ச்சிபெற வைப்பேன் - மு.க. ஸ்டாலின்
  • BREAKING-NEWS பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் சென்னை ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் மாநிலம் போலீசார் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்த வேண்டும்- ப. சிதம்பரம்
  • BREAKING-NEWS நாகை: கடல் சீற்றத்தால் வேதாரண்யம் பகுதி மீனவர்கள் 2ஆவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
  • BREAKING-NEWS கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல்வீசித் தாக்குதல்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்கக்கோரி தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் திமுகவினர் புகார் மனு
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்த சதி நடைபெறுகிறது: திருமாவளவன்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் மக்கள் டிடிவி தினகரனை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாகையில் போராட்டம் நடத்த வந்த ஹெச்.ராஜாவை வஞ்சியூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்
  • BREAKING-NEWS பணப்பட்டுவாடா செய்தால் தேர்தலை ரத்து செய்வது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: திருமாவளவன்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டையில் உள்ள பிசியோதெரபி கிளினிக்கில் கணக்கில் வராத ரூ.13 லட்சம் பறிமுதல்
  • BREAKING-NEWS இருண்டு கிடக்கும் தமிழகத்திற்கு இடைத்தேர்தல் முடிவு வெளிச்சத்தை பாய்ச்சட்டும்- ஸ்டாலின்
  • BREAKING-NEWS வரும் 19 ஆம் தேதி கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரத்திற்கு பிரதமர் வர உள்ளதாக தகவல்
விளையாட்டு 27 Jul, 2017 02:43 PM

600-க்கு ஆல் அவுட் ஆனது இந்தியா: இலங்கை 32/1

india-all-out-for-600

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய கிரிக்கெட் அணி, 600 ரன்களை குவித்துள்ளது. 

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, தவான், புஜாரா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், 3 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்தது. இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட தவான், 190 ரன்களில் ஆட்டமிழந்தார். புஜாரா 144 ரன்களுடனும் ரஹானே 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 
இரண்டாவது நாள் ஆட்டம் துவங்கியதும் புஜாரா மேலும் 9 ரன்கள் சேர்த்து 153 ரன்களில் அவுட்டாக, ரகானே 57 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அஸ்வின் 47 ரன்களும் சாஹா 16 ரன்களும் எடுத்து தொடர்ந்து ஆட்டமிழக்க, இந்திய அணி 517 ரன்களை கடந்தது. டெஸ்டின் அறிமுகமாக ஹர்திக் பாண்ட்யா 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜடேஜா 15 ரன்கள், ஷமி 30 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி 133.1 ஓவரில் 600 ரன்களை குவித்தது. இலங்கை தரப்பில் பிரதீப் 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கருணாரத்னே 2 ரன்களில் அவுட்டானார். அவரது விக்கெட்டை உமேஷ் யாதவ் சாய்த்தார். உபுல் தாரங்காவும் குணதிலகாவும் இப்போது ஆடிக்கொண்டிருக்கின்றனர். அந்த அணி 6 ஒவர்களில் 32 ரன்கள் எடுத்துள்ளது. 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close