[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

உலகக் கோப்பை டி20: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது நியூசிலாந்து

australia-v-new-zealand-world-t20-group-2-mcclenaghan-leads-nz-to-second-victory

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 10 ஆட்டத்தில் குரூப் 2 பிரிவில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதின. தர்மசலாவில் நடைபெற்ற போட்டியில்டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது. 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது.

நியூசிலாந்து அணி வீரர் குப்தில் 39 ரன்களும், எல்லியாட் 27 ரன்களும், கேஎஸ் வில்லியம்ஸன் 24 ரன்களும், முன்ரா 23 ரன்களும் குவித்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ப்பால்க்னர், மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 143 ரன்களை வெற்றி இலக்காக நோக்கி ஆஸ்திரேலிய அணி ஆடத்தொடங்கியது.20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 8 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக யுடி கவாஜா 38 ரன்கள் எடுத்தார். மார்ஸ் 24 ரன்களும், மேக்ஸ்வெல் 22 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் மிட்சல் மெக்லநகன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆன்டர்சன், சான்ட்னர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நியூசிலாந்து அணி முதல் ஆட்டத்தில் இந்திய அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close