[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் அமலுக்கு வந்தது புதிய சொத்து வரி!
  • BREAKING-NEWS காஞ்சிபுரத்தில் கனமழையால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்- விவசாயிகள் வேதனை
  • BREAKING-NEWS மணல் கடத்தலையும், அதில் நேர்மையான அதிகாரிகள் கொல்லப்படுவதையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் ரகசியமாக நடைபெறும் குட்கா விற்பனை- அதிரடி காட்டிய போலீஸ்!

கவுர் சாதனை சதம்: ஆஸி.யை பழிதீர்த்தது இந்தியா!

kaur-s-171-sets-up-final-against-england

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. ஹர்மன்பிரீத் கவுர் சாதனை சதம் அடித்தார்.

11வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. டெர்பியில் நேற்று நடந்த 2 வது அரையிறுதியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதின. மழை காரணமாக, போட்டி 42 ஓவராக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் மிதாலிராஜ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்தியாவுக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. மந்தனா 6 ரன்னிலும், பூனம் ரவுத் 14 ரன்னிலும் அவுட் ஆனார்கள். பின்னர் மிதாலிராஜும், ஹர்மன்பிரீத் கவுரும் இணைந்து விளாசினர். ஸ்கோர் 101 ரன்களை எட்டிய போது மிதாலிராஜ் (36 ரன்) கிளீன் போல்டு ஆனார்.

இதைத் தொடர்ந்து ஹர்மன்பிரீத் கவுருடன் தீப்தி ‌ஷர்மா சேர்ந்தார். முதலில் நிதானம் காட்டிய கவுர், பிறகு அதிரடி காட்டினார். 90 பந்துகளில் தனது 3வது சதத்தை பூர்த்தி செய்த ஹர்மன்பிரீத் கவுர் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டார்.  தொடர்ந்து ருத்ரதாண்டவம் ஆடிய அவர் 115 பந்துகளில், 20 பவுண்டரி, 7 சிக்சருடன் 171 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். மகளிர் ஒரு நாள் போட்டி வரலாற்றில் இந்திய வீராங்கனையின் 2வது அதிகபட்ச ஸ்கோர் இது. தீப்தி ‌ஷர்மா கடந்த மே மாதம் அயர்லாந்துக்கு எதிராக 188 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது. 
அடுத்து 281 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியா, 169 ரன்களுக்குள் 9 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய பிளாக்வெல் 90 ரன்கள் விளாசினார். ஆஸ்திரேலிய அணி 41-வது ஓவரில் 245 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றி மூலம், லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் அடைந்த தோல்விக்கு இந்தியா பழி தீர்த்துக்கொண்டது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close