[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

கபடி விளையாட்டு உலக எல்லைகளை கடந்து செல்லும்: கமல் நம்பிக்கை

kamal-believes-game-kabaddi-passes-the-boundaries-of-the-world

ஐந்தாவது சீசன் புரோ கபடி லீக் தொடரில் பங்கேற்கும் தமிழ் தலைவாஸ் அணியின் உடை அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் அணியின் உரிமையாளர்களான கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், திரை நட்சத்திரங்கள் அல்லு அர்ஜூன், ராம் சரண், உள்ளிட்ட பிரபலங்களுடன் விளம்பர தூதராக நியமிக்கப்படுள்ள நடிகர் கமல்ஹாசனும் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய கமல், விளம்பர தூதராக என்னை நியமித்த சச்சின் உள்ளிட்ட உரிமையாளர்களுக்கு நன்றி. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றிய விளையாட்டு கபடி. தமிழகத்தில் தோன்றியது என்கிற கூற்றும் உண்டு. சச்சின் அவர்களுக்குத் தெரியும்... எங்கேயோ ஒரு ஐரோப்பா தீவில் உருவான விளையாட்டு உலகம் முழுவதும் பரவ முடியும் என்றால், நம் நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆடிவந்த கபடி விளையாட்டு தேசிய எல்லைகளை மட்டுமல்ல, உலக எல்லைகளை கடந்து செல்லும் என்கிற நம்பிக்கை கொண்டவர்களில் நானும் ஒருவன்’ எனத் தெரிவித்தார். தமிழ்தலைவாஸ் என பெயரிடப்பட்டதற்கான விளக்கத்தையும் அவர் தெரிவித்தார். ’தமிழ் தலைவாஸ் என இவர்கள் பன்மையில் பெயர் வைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இப்போதெல்லாம் ஒருமையில் பேசுவது வழக்கமாக இருக்கும்போது தலைவாஸ் எனப்பெயர் வைத்துள்ளனர். இதற்கு பொருள் எல்லோரும் இந்நாட்டு மன்னரே என்பது தான்’எனத் தெரிவித்தார். 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close