விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் காலிறுதிப்போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், கனடாவின் மிலோஸ் ரானிச்சை எதிர்த்து விளையாடினார். தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபெடரர், 6-4, 6-2, 7-6 என்ற நேர் செட்களில் வெற்றியை வசமாக்கினார். இந்த வெற்றியின் மூலம் ஃபெடரர் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் செக் குடியரசின் தாமஸ் பெர்டிச் உடன், ஃபெடரர் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.
முன்னதாக தாமஸ் பெர்டிச் உடனான போட்டியில் தொடரின் இரண்டாம் நிலை வீரரான நோவக் ஜோகோவிச் 7-6, 2-0 என முன்னிலையில் இருந்தபோது காயத்தால் விலகினார்.
"அறியாமல் புலம்பும் கமல் சாருக்கு சமர்ப்பணம்" ட்விட்டரில் பதிலடி கொடுத்த உதயநிதி
பாதுகாப்பு படை வீரர்களை வான்வழியாக அழைத்துச் செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்
“ காகமும் யோகாவும்” சர்ச்சைக்குள்ளான கிரண் பேடியின் ட்விட்டர் பதிவு
மொகாலி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பாக் கிரிக்கெட் வீரர்கள் புகைப்படங்கள் நீக்கம் !
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தடை...!