[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கமல்ஹாசனை ஆசிர்வாதம் செய்து அனுப்பிய விஜயகாந்த் தேர்தல் நேரத்தில் அவருடன் கூட்டணி குறித்து முடிவெடுப்பார் - பிரேமலதா விஜயகாந்த்
  • BREAKING-NEWS காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் உட்பட 44 அமைப்புகளுக்கு அழைப்பு
  • BREAKING-NEWS #JUSTIN தமிழக அரசின் அம்மா ஸ்கூட்டர் மானிய திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு
  • BREAKING-NEWS ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டுவதன் மூலம் ஜோக்கர் என்பதை திமுகவினர் காட்டிக்கொள்கின்றனர்-ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS நான் இனி சினிமா நட்சத்திரம் இல்லை; உங்கள் வீட்டு விளக்கு- கமல்ஹாசன்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் மாதந்தோறும் 40 முதல் 50 முதியவர்கள் மர்ம மரணம்
  • BREAKING-NEWS கமல் ஒரு மரபணு மாற்றப்பட்ட விதை; இந்தியாவில் அதை விதைப்பதில்லை- அமைச்சர் ஜெயக்குமார்

கும்ப்ளேவை மதிக்கிறேன்: ஆனால், அதை சொல்லமாட்டேன்: கோலி

kohli-opens-up-says-will-never-reveal-dressing-room-details

இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கும்ப்ளே விலகியிருக்கும் முடிவை மதிக்கிறேன் என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி கூறியுள்ளார்.

விராத் கோலியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே விலகியுள்ளார். இந் நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாடுவதற்காக அங்கு சென்றுள்ள விராத் கோலி, செய்தியாளர்களிடம் பேசும்போது இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது, ‘கும்ப்ளே தனது பார்வையில் சில வி‌ஷயங்களைக் கூறியிருக்கிறார். அதோடு பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார். அவரது முடிவை மதிக்கிறேன். ஒரு கிரிக்கெட் வீரராக கும்ப்ளே மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். நாட்டுக்காக கிரிக்கெட்டில் அவர் செய்துள்ள சாதனைகள் பெரிது. கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக வீரர்களின் டிரெஸ்சிங் ரூமில் நடக்கும் விஷயங்களை வெளியில் சொல்லக் கூடாது என்ற கலாசாரத்தை கடை பிடித்துவருகிறோம். அதனால் அங்கு நடந்த விஷயங்கள் பற்றி நான் வெளிப்படையாகச் சொல்ல மாட்டேன்’ என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close