[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேலைக்குச் செல்லும் பெண்கள் பத்திரமாக வீடு திரும்ப முடியாத நிலை உள்ளது - கனிமொழி
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் தமிழக உரிமை நிலைநாட்டப்படும் - அமைச்சர் உதயகுமார்
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்துக்கான மத்திய சுற்றுச் சூழல்துறை அனுமதியை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS விருதுநகர்: அருப்புக்கோட்டையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை
  • BREAKING-NEWS வன்கொடுமை சட்டத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சென்னையில் 200 க்கும் மேற்பட்டோர் பேரணி
  • BREAKING-NEWS தமிழத்தில் எல்லாவித தூசிகளும் தட்டப்பட்டு காணாமல்போன குப்பை விஜயகாந்த்- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS செம்பரபாக்கம் ஏரிக்கு திறக்கப்படும் நீரின் அளவு 443 கன அடியில் இருந்து 593 கன அடியாக அதிகரிப்பு

சமூக வலைதளங்களில் வரலாறு படைத்த இந்தியா-பாகிஸ்தான் இறுதிப் போட்டி

india-pakistan-champions-trophy-final-becomes-most-tweeted-odi-ever

சமூக வலைதளமான ட்விட்டரில் அதிகம்பேரால் விவாதிக்கப்பட்ட போட்டியாக இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டி புதிய சாதனை படைத்துள்ளது. 
சாம்பியன்ஸ்  கோப்பை தொடர்பாக ட்விட்டரில் உருவாக்கப்பட்ட #CT17 என்ற ஹேஷ்டேக்கின் கீழ் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவுகள் இடம்பெற்றதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இரண்டாம் இடத்திலும் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டியே இடம்பெற்றுள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் லீக் போட்டியில் இவ்விரு அணிகள் மோதிய போட்டியே ட்விட்டரில் அதிகம் விவாதிக்கப்பட்ட சர்வதேச ஒருநாள் போட்டி அந்தஸ்தைப் பெற்றது. மேலும், விளையாட்டுக்கென முதல் சாட்பாட்டினை ட்விட்டருடன் இணைந்து ஐசிசி இந்த தொடரின் போது அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் ரசிகர்கள் விரும்பிய நிகழ்வுகளை நேரடியாக வீடியோவாகவோ, புகைப்படங்களாகவோ ஐசிசியிடமிருந்து பதில் கிடைத்தது. இதனால், சாம்பியன்ஸ் கோப்பையில் தங்களது விருப்பமான நிகழ்வுகளை அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடித்த அணிகள் பங்கேற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடந்தது. இந்த தொடரில் தரவரிசையில் 8ஆவது இடம் பெற்றிருந்த பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்தது.  

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close