[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி

உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு அனுமதி

pakistan-gets-security-clearance-team-to-depart-for-india-friday

இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க் பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் தங்கள் நாட்டு கிரிக்கெட் அணிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும், அவ்வாறு அளித்த பின்னரே தொடரில் பங்கேற்க அனுமதிக்க முடியும் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்தது.

இதனால், பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதில் சிக்கல் நீடித்தது. இந்த நிலையில், உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து, பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு நாளை புறப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் டி20 உலககோப்பை போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வருகிற 19-ல் நடைபெறவுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close