[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்ற கோத்தபய ராஜபக்ச நவ.29 இந்தியா வருகை
  • BREAKING-NEWS ரஜினி, கமல், விஜய் சேர்த்து வந்தாலும் அதிமுக சிங்கிளாக எதிர்க்கும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS மக்களின் நலனுக்காக கமலுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவேன் - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS அவசியம் ஏற்பட்டால் நானும், ரஜினியும் இணைவோம் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்
  • BREAKING-NEWS உள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ரோகித் ஷர்மா, கோலி சிறப்பான ஆட்டம்... இறுதிப் போட்டியில் இந்திய அணி

india-beat-bangladesh-9-wickets

வங்கதேசத்துக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதிப் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

வங்கதேச அணி நிர்ணயித்த 265 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் ஜோடி வழக்கம்போல சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்ந்த நிலையில் 46 ரன்களில் ஷிகர் தவான் ஆட்டமிழந்தார். இதையடுத்து, ரோகித் ஷர்மாவுடன் கைகோர்த்த கேப்டன் கோலி இந்திய அணியின் வெற்றியை எளிதாக்கினார். வங்கதேச பந்துவீச்சை எளிதாக சமாளித்த இந்த ஜோடி, மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டது. உலகின் தலைசிறந்த சேசிங் மாஸ்டர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்த கோலி 42 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவரைத் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் ஷர்மா, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 11ஆவது சதத்தினை நிறைவு செய்தார். வங்கதேசம் நிர்ணயித்த 265 ரன்கள் இலக்கினை 40.1 ஓவர்களில் இந்திய அணி எட்டியது. இதன்மூலம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதிபெற்றது. ரோகித் ஷர்மா 123 ரன்களுடனும், விராத் கோலி 96 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். வங்கதேச அணி தரப்பில் மொர்டாசா ஒரு விக்கெட் வீழ்த்தினார். லண்டன் ஓவல் மைதானத்தில் வரும் 18ல் நடைபெறும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி எதிர்கொள்கிறது. சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதிபெறுவது இது நான்காவது முறையாகும். 
 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close