[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS பேரவை தேர்தலில் பாஜக கூட்டணியே ஆட்சியமைக்கும் - பொன்.ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS டெல்லியில் மைக்ரோசாஃப்ட் இணை-நிறுவனர் பில்கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் சென்னையை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் – சீமான்
  • BREAKING-NEWS அதிசயம், அதிர்ஷ்டத்தை நம்புகிறவர் ரஜினி - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS ராஜஸ்தானில் பேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு

இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுமா இந்தியா?... 265 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வங்கதேசம்

kedar-jadhav-and-jasprit-bumrah-keep-bangladesh-to-264

சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற 265 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது வங்கதேசம். 

பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்து வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, பீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணியினர், தொடக்கத்தில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தனர். இதையடுத்து 3ஆவது விக்கெட்டுக்கு கைகோர்த்த தமீம் இக்பால் - முஷிபிகூர் ரஹ்மான் ஜோடி சீரான ரன்குவிப்பில் கவனம் செலுத்தியது. 3ஆவது விக்கெட்டுக்கு 123 ரன்கள் குவித்த நிலையில், தமீம் இக்பால் ஆட்டமிழந்தார். 70 ரன்கள் எடுத்திருந்த அவர், பகுதிநேர சுழற்பந்து வீச்சாளரான கேதர் ஜாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தமீம் இக்பால் விக்கெட்டைத் தொடர்ந்து ஷகீப் அல் ஹசன் மற்றும் முஷிபிகூர் ரஹ்மான் விக்கெட்டுகளை அடுத்தடுத்து கைப்பற்றிய இந்திய அணி, வங்கதேசத்தின் ரன்குவிப்புக்கு முட்டுக்கட்டை போட்டது. ரஹ்மான் 61 ரன்களிலும், ஹசன் 15 ரன்களிலும், தங்களது விக்கெட்டைப் பறிகொடுத்தனர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. கேப்டன் மொர்டாசா 30 ரன்களுடனும், டஸ்கின் அகமது 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.  

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close