[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

அனுஷ்கா முன் கண்ணீர் விட்ட கோலி!

virat-kohli-cried-in-front-of-anushka

 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியும் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருவது கிரிக்கெட் தாண்டியும் பிரபலம். ஆனால் இருவரும் அதை பற்றி மூச்சு விடவில்லை. இப்போதுதான் ஒரு பேட்டியில் முதல் முறையாக மனம் திறந்திருக்கிறார் கோலி. அதுவும் வெளிப்படையாகச் சொல்லவில்லை. 

அவர் கூறும்போது, ‘2016-ல இங்கிலாந்து எதிரான டெஸ்ட் போட்டி மொகாலியில நடந்துட்டு இருந்தது. அப்ப அனுஷ்கா என்னை பார்க்க வந்திருந்தாங்க. அப்ப நான் ரொம்ப மகிழ்ச்சியா இருந்தேன். திடீர்னு கிரிக்கெட் போர்டுல இருந்து அழைப்பு வந்தது. போனை எடுத்து பேசினேன். அப்பதான், ’இந்திய அணியோட ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கும் உங்களைதான் கேப்டனா நியமிச்சிருக்கோம்’னு சொன்னாங்க. சந்தோஷத்துல எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. எமோஷனாகிட்டேன். தன்னாலயே கண்ணீர் வடிஞ்சுது. விஷயத்தை அனுஷ்காட்ட சொன்னேன். அந்த நாள் ரொம்ப அழகானது. நான் வாழ்க்கையில எப்பவும் நினைச்சுட்டே இருக்கிற மாதிரியான நிகழ்வு அது. மெல்போர்ன்ல (2014) டெஸ்ட் கேப்டனா முதன் முதல்ல ஆடியபோதும் எங்கூட அனுஷ்கா இருந்தாங்க. அவங்க என்னோட ஸ்பெஷல். இந்த ரெண்டு சம்பவங்களை என்னால மறக்கவே முடியாது’ என்று தெரிவித்திருக்கிறார் கோலி.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close